ஆஹா! மொத்தமாக மாறப்போகும் சென்னை பறக்கும் ரயில் நிலையங்கள்.. மினி ஷாப்பிங் மால், பார்க்கிங் வசதி
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை உள்ள ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என்றும், இந்த நிலையங்களில் மினி ஷாப்பிங் மால்கள், கேமிங் ஆர்கெட்ஸ் ஆகியவை அமைக்கப்படும் என்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்(CUMTA) தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. போக்குவரத்து நெரிசலால் திண்டாடும் வாகன ஓட்டிகள், பொது போக்குவரத்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுவதை காண முடிகிறது. அதிலும் பீக் நேரங்களில் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டத்தால் ரயில்கள் நிரம்பி வழிகிறது.

சென்னையில், தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை- வேளச்சேரி, சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை ஆகிய முக்கிய வழித்தடங்கள் இருக்கின்றன. கடந்த 1997ஆம் ஆண்டு பறக்கும் ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. சென்னை கடற்கரை- மயிலாப்பூர் வரை முதற்கட்டமாக தொடங்கப்பட்டது.
பறக்கும் ரயில்: இதற்கு பயணிகள் இடையே வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அடுத்த கட்டத்திற்கு ரயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மயிலாப்பூரில் இருந்து வேளச்சேரி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சிந்தாரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் மேம்பாலங்கள் வழியே இந்த ரயில்கள் இயக்கப்படுவதால் பறக்கும் ரயில் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
ரூ.85 கோடி நஷ்டம்: சென்னை கடற்கரையில் இருந்து 4 வது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடப்பதால் தற்போது சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்படுவது இல்லை. சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி இடையேதான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தை பொறுத்தவரை கமந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.
ரயில் நிலையங்களில் 1 முதல் 4 தடங்கள் கொண்ட ரயில் நிலையங்களாக தற்போது இந்த ரயில் நிலையங்கள் உள்ளன. இங்கு 20,44,400 சதுர மீட்டர் அளவில் இடங்கள் உள்ளன. சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான ரயில் இயக்கம், பராமரிப்பு என இந்த சேவைக்காக தற்போது ஆண்டுக்கு ரூ.105 கோடி செலவு ஆகிறது. வருவாய் வெறும் 20 கோடி மட்டுமே கிடைப்பதால் ஒவ்வொரு ஆண்டும் தெற்கு ரயில்வேக்கு ரூ.85 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.
2025-ம் ஆண்டில்: சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்தி தமிழக அரசு மூலம் இந்த ரயில் சேவையை இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக விரிவான வணிக திட்ட அறிக்கையை தமிழக அரசு தயார் செய்து வருகிறது. வணிக திட்ட அறிக்கையை தயார் செய்ய டெண்டரும் வழங்கப்பட்டுள்ளது. வணிக திட்ட அறிக்கை ஜனவரி மாதம் இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால் வரும் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பறக்கும் ரயில் சேவையை முழுமையாக கையப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் இன்றி பிற சேவைகள் மூலமாகவும் வருவாயை பெருக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
மினி ஷாப்பிங் மால்கள்: அதாவது, ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி, வணிக வளாகங்கள், உணவகங்கள் ஆகியவற்றையும் அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்(CUMTA) அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:- சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை உள்ள ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.
இந்த ரயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்கள், உணவு விடுதிகள், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்டவை செய்யப்படும். வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் ஆகிய எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில் வணிக சேவையை செயல்படுத்த முதல் கட்டமாக அடையாளம் கண்டுள்ளோம். இந்த ரயில் நிலையங்களில் மினி ஷாப்பிங் மால்கள், கேமிங் ஆர்கெட்ஸ் ஆகியவை அமைக்கப்படும்" என்றனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
ஐஆர்சிடிசி கேண்டீன்களில் ஏஐ கேமரா.. ரயில்களில் உணவு சாப்பிடுபவர்கள் அறிய வேண்டியவை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications