வேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்
Recommended Video
சென்னை: வேலூரில் சூப்பர் டூப்பர் மழை பெய்துள்ளது என்றும் சென்னையில் மேகக் கூட்டங்கள் கலையாததால் நின்று அடிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வேலூரில் நேற்று முன் தினம் முதல் மழை கொட்டி வருகிறது.
சென்னை, ஆம்பூர், வாணியம்பாடியில் மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இந்த சீசனில் அரிதான மழை பெய்து வருகிறது. அது 2ஆவது நாளாகவும் நீடித்து வருகிறது. மேலடுக்கு சுழற்சியால் ஏற்பட்ட மழைக்கு நன்றி. சென்னையை பொருத்தவரை ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.
அதாவது சென்னையில் கூடியுள்ள மேகங்கள் அவ்வளவு எளிதில் கலையாது. எனவே மழை நின்று அடிக்கும். வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூரில் மேற்கு பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. அது போல் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுவை ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

வெள்ளப்பெருக்கு
வேலூர் மாவட்டத்தில் சூப்பர் டூப்பர் மழை பெய்து வருகிறது. ஆலங்காயத்தில் மிக அதிகபட்ச மழையாக 151 மி.மீ. பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கலையவில்லை
தென் சென்னையில் மழை பெய்து வருகிறது. மற்ற இடங்களில் அதிகபட்ச மழை பெய்யும். புறநகர் பகுதியில் வட பகுதிகள் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும். சென்னையில் நேற்று இரவு உருவான மேகங்கள் இன்னும் கலையாமல் உள்ளன.

மேகக் கூட்டங்கள்
ஆம்பூர், வாணியம்பாடி பகுதியிலும் மேகக் கூட்டங்கள் இன்னும் கலையாமல் உள்ளது. வலுவிழக்காமலும் உள்ளது. வேலூரில் ஆலங்காயத்தில் 151 மி.மீ மழையும், திருப்பத்தூரில் 97 மி.மீ. மழையும், வாணியம்பாடியில் 85 மி.மீ. மழையும், பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மழை
வேலூரில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்து வருகிறது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூரில் மழை பெய்துள்ளது. ஆம்பூரில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications