கதிருக்கு டப் பைட் கொடுக்கும் ஏசிஎஸ்.. பாமக தேமுதிக வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளிய அதிமுக
Recommended Video
சென்னை: பாமக, தேமுதிகவின் வாக்குகள் அதிமுகவுக்குப் பலம் கொடுத்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் திமுக மீது உள்ள ஆத்திரம் காரணமாகவும், துரைமுருகன் மீது உள்ள கோபம் காரணமாவும் மொத்தமாக வாக்களித்திருப்பது முன்னிலை நிலவரத்தை பார்க்கும் போது தெரிகிறது.
இதன் மூலம் பாமக, தேமுதிகவின் மொத்த வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவுக்குப் போயிருப்பது தெரிகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த 38 லோக்சபா தொகுதி தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிகவுடன் சேர்ந்து அதிமுகவும் படுதோல்வி அடைந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி கேரளா தமிழகம் தவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பாஜகவிடம் பெரிய அளவில் தோற்றதால் அந்தகட்சியால் மிககுறைந்த இடங்களிலயே வெற்றி பெற முடிந்தது.
இதனால் மத்தியில் பாஜக கூட்டணி மிகப்பெரிய பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. அதன்பிறகு நிறுத்தப்பட்ட வேலூரில் லோக்சபா தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டார். அதேபோல் திமுக சார்பில்கதிர் ஆனந்த் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக திமுக இடையே கடும் போட்டி பிரச்சாரங்கள் நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொய்யான வாக்குறுதி கொடுத்து 38 தொகுதிகளில் திமுக வென்றதாக கூறினார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் கடுமையான பிரச்சாரங்களை முன்வைத்தார். முத்தலாக்கில் இரட்டை நிலைப்பாடு, பாஜகவுடனான கூட்டணி ஆகியவற்றை குறிப்பிட்டு பிரச்சாரம் செய்தார். அதிமுகவுக்கு ஆதரவாக பாமக மற்றும் தேமுதிக பிரச்சாரத்தில் இறங்கின.
இதனால் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்துக்கும், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகம் இடையே கடும் போட்டிஏற்பட்டது. இறுதியாக தேர்தல் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடந்தது. இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுவருகிறது. எனினும் திமுகவும் டப் பைட் கொடுத்து வருகிறது. கடந்த முறையைவிட இந்த முறை அதிமுக கூட்டணி திமுகவுக்கு கடும் போட்டி அளித்து வருவதற்கு பாமக, தேமுதிகவின் வாக்குள் மொத்தமாகவே விழுந்ததே காரணம் என கூறப்படுகிறது. அதேநேரம் இந்த வாக்குளை பெற ஏசி சண்முகம் கடுமையாக உழைத்து இருப்பார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications