வேலூர் சிறையில் இஸ்லாமிய கைதிகள் வழிபாட்டிற்கு அனுமதி மறுப்பு? சிறை நிர்வாகம் தந்த முக்கிய விளக்கம்
சென்னை: வேலூர் மத்தியச் சிறையில் இஸ்லாமியச் சிறைவாசிகள் தொழுகை உரிமை மறுக்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
கொரோனாவுக்கு பின்பு வேலூர் மத்தியச் சிறைச் சாலையில் இஸ்லாமியச் சிறைவாசிகள் தொழுகை நடத்தும் மசூதியை மட்டும் திறக்காமல் சிறை நிர்வாக மூடி வைத்துள்ளதாகக் கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் உலா வந்தன.

பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரம் குறித்துப் பேசிய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த விவகாரத்தில் திமுக அரசை சாடியிருந்தார். சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை திமுக அரசு பறிப்பதாக விமர்சித்த அவர், சிறைச் சாலைகள் என்பது தவறு செய்பவோரை நல்வழிப்படுத்தும் இடங்கள் எனக் கூறினார்.
மேலும், பலரும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், இது தொடர்பாக வேலூர் சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இணையத்தில் இது தொடர்பாகப் பரவும் தகவலில் உண்மை இல்லை என மறுத்துள்ளது. இது குறித்து சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலுார் மத்திய சிறையில் சிறைவாசிகளின் மத உரிமைகள் மறுக்கப்படுவதாகச் சமீபமாக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் விஷமத்தனமான குற்றச்சாட்டு ஆகும்.
வேலூர் மத்தியச் சிறை: வேலூர் மத்திய சிறை உட்பட தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளும் எவ்வித சிரமுமின்றி தங்கள் மத வழிபாட்டைத் தொடரும் வகையில் சமமான மத வழிப்பாட்டு உரிமையைப் பெற்றுள்ளனர்.
சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் சிறை விதிகளின்படி ஏற்கனவே நடைமுறையிலுள்ள வழக்கத்தின்படியும் எவ்வித மாற்றமுமின்றி முழுமையாக இயங்கி வருகின்றன. சிறை வளாகங்களில் அமைந்துள்ள இவ்வழிபாட்டுத் தலங்களுக்குச் சிறைவாசிகள் சென்று வழிபடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நடைமுறை மத்திய சிறை வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து சிறைகளிலும் பின்பற்றப்படுகிறது.
விளக்கம்: நடப்பாண்டு உட்பட ஒவ்வொரு ஆண்டும் புனித ரம்ஜான் மாதத்தில் வேலூர் மத்திய சிறை, உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லீம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து முஸ்லீம் சிறைவாசியினரும் தங்கள் தொகுதிகளில் நோன்பு கடைப்பிடிக்கவும் தொழுகை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் தமிழ்நாடு சிறை விதிகள் 1983, விதி எண்.286(6)-ன் படி ரமலான் காலத்தில், நோன்பிருக்கும் முஸ்லீம் சிறைவாசிகள் தங்களுக்கான உணவைத் தனியாகச் சமைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன், தொழுகையின் போது தேவைப்படும் பாய்கள் மற்றும் தண்ணீர் போன்றவை தேவையான அளவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அனுமதி இல்லை: இருப்பினும் தமிழ்நாடு சிறை விதிகள் 1983, விதி எண்.286(4)-ன் படி பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த மதத்தைச் சார்ந்த சிறைவாசிகளானாலும் மதவழிபாடு அல்லது மதச்சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகப் பெரிய அளவில் கூட்டம் கூடுவது அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே, அனைத்து மதத்தைச் சார்ந்த சிறைவாசிகளும் தங்களது மத வழிபாடு மற்றும் மதச் சடங்குகளை நிறைவேற்றிட சிறைத்துறையின் வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்கள் மற்றும் சிறை விதிகளுக்குட்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே, சிறைவாசிகள் சமய உரிமைகள் மீறப்படுவதாகச் செய்தி ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்ற விஷமத்தனமான ஒன்று என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
தவெகவில் இணையப் போகிறீர்களா?.. 25 எம்.எல்.ஏக்களில் இப்போது 17 பேர் தான்.. டென்ஷனாகிய சி.வி.சண்முகம் -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்..பொய்க்கால் குதிரை அரசு! விஜய்யை வெளுத்த எடப்பாடி பழனிசாமி -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications