Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் ரியல் எஸ்டேட் ஸ்டாப்? DTCP ஆபீசில் மலையென கோப்புகள்! 1 அதிகாரிக்கு 2 மாவட்டமா? பெயிரா நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மதுரை, திருப்பத்தூர், மற்றும் வேலூர் மாவட்டங்களில் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகங்களில் நிரந்தர துணை இயக்குனர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு என்று சொல்லப்படும் பெயிரா கோரிக்கை விடுத்துள்ளது.. மேலும் மக்களின் நலனையும், உடனடி தேவையையும் கருதி, நகர் ஊரமைப்பு இயக்குனருக்கு முக்கிய கடிதம் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஆ.ஹென்றி இந்த கடிதத்தை எழுதியிருக்கிறார்..

Vellore Real Estate DTCP

மதுரை, திருப்பத்தூர், மற்றும் வேலூர் மாவட்டங்களில் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகத்திற்கு மேற்குறிப்பிட்ட வகையில் மிக முக்கிய பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு வாய்ந்த துணை இயக்குனர் பதவிக்கு நிரந்தரமாக துணை இயக்குனர் நியமிக்கப்படாமல் இருப்பது ஏன் என்றும் தன்னுடைய கடிதத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

DTCP அலுவலகங்கள்

அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நகர் ஊரமைப்பு இயக்ககம் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் திட்டமிடல், நிலப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல், மற்றும் நகரங்கள் சீராக வளர்வதை உறுதி செய்தல். இந்தத் துறையின் பணிகள் முதன்மைத் திட்டங்களைத் தயாரித்தல், கட்டிட அனுமதிகளை வழங்குதல் மற்றும் நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்ற அனுமதித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் DTCP அலுவலகங்கள் துணை இயக்குனர் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாக மதுரை, திருப்பத்தூர், மற்றும் வேலூர் மாவட்டங்களில் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகத்திற்கு மேற்குறிப்பிட்ட வகையில் மிக முக்கிய பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு வாய்ந்த துணை இயக்குனர் பதவிக்கு நிரந்தரமாக துணை இயக்குனர் நியமிக்கப்படவில்லை.

மதுரை, திருப்பத்தூர்

எனவே மேற்கண்ட மாவட்டங்களில் செயல்படும் DTCP அலுவலகத்தின் பணிகள் தடைபடாமல் நடைபெறும் வகையில், திண்டுக்கல் மாவட்ட துணை இயக்குனர் கூடுதல் பொறுப்பாக மதுரை மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகத்தின் துணை இயக்குனராகவும் செயலாற்றி வருகிறார்.

அதுபோல் திருப்பத்தூர் மாவட்ட DTCP அலுவலகத்தின் பணிகள் தடைபடாமல் நடைபெறும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட துணை இயக்குனர் அவர்கள் கூடுதல் பொறுப்பாக திருப்பத்தூர் மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகத்தின் இயக்குனராகவும் செயலாற்றி வருகிறார்.

வேலூர் மாவட்ட DTCP

மேலும் வேலூர் மாவட்ட DTCP அலுவலகத்தின் பணிகள் தடைபடாமல் நடைபெறும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குனர் அவர்கள் கூடுதல் பொறுப்பாக வேலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகத்தின் துணை இயக்குனராகவும் செயலாற்றி வருகிறார் என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மேற்கண்ட வகையில் துணை இயக்குனர்கள் இரண்டு மாவட்டங்களின் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் பணிச்சுமை மற்றும் உரிய நேரமின்மையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையினர் தொழில்நுட்ப அனுமதி வேண்டி இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பங்கள் ஒப்புதல் கிடைக்க பெறாமல் பெருமளவில் நிலுவையில் உள்ளன.

தேங்கும் கோப்புகள்

DTCP அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சேவைகளையும் உரிய நேரத்தில் கிடைக்க பெறாமல் ஏராளமான கோப்புகள் தேங்கி கிடக்கும் சூழல் நிலவுவதால், மேற்கண்ட மாவட்டங்களில் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை பணிகள் பெருமளவில் முடங்கி உள்ளது.

மேலும், வீட்டு மனை பிரிவு மற்றும் கட்டுமானங்களில் முதலீடு செய்த பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு கால விரயம் ஏற்படுவதுடன் பொருளாதார ரீதியாக பெரும் இழப்புகளுக்கு ஆளாகி அல்லல்படுகின்றனர்.

துணை இயக்குனர்கள்

ஆகவே நகர் ஊரமைப்பு இயக்குனர், மேற்கண்ட பிரச்சனைகளை தங்களின் மேலான கவனத்தில் கொண்டு மதுரை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் செயல்படும் DTCP அலுவலகங்களுக்கு நிரந்தர துணை இயக்குனர்களை விரைந்து நியமித்து பொதுமக்கள் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்று அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+