கேமராவில் ஏடாகூடமாக சிக்கிய திருவள்ளூர் ராணி.. அதுவும் ஆபீஸிலேயே.. முதல்முறையாக பத்திரப்பதிவு அதிரடி
சென்னை: அலுவலகத்தில் வைத்து பணம் வாங்கிய சார்பதிவாளரை, சிசிடிவியில் பார்த்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கைகள் பெருகிக்கொண்டே செல்கிறது.. அதிலும் பத்திரப்பதிவு துறையில் இந்த லஞ்ச - ஊழல் விவகாரம் சற்று அதிகமாகவே தென்பட்டு வருகிறது..

பதிவுத்துறை: அதனால்தான், பதிவுத்துறை கறாரான நடவடிக்கைகளை கையில் எடுத்து வருகிறது.. யாராக இருந்தாலும் சரி, லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதுமே, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி வருகிறது.. இதில், பெண் அதிகாரிகளே லஞ்சம் வாங்கி கைதாகி வருவது அதிகரித்து வருவது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
பதிவுத்துறையில் நிலவும் முறைகேடுகளை முற்றிலும் களைய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்ததையடுத்து, அமைச்சர் மூர்த்தியும், பதிவுத்துறை அதிகாரிகளிடம் இது தொடர்பான ஆலோசனைகளை நடத்தி, அறிவுறுத்தி வருகிறார்.
அதேபோல, பதிவுத்துறை ஐஜியாக உள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தவறு என்று தெரிந்தால் தயவுதாட்சண்யமே பார்க்காமல், பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
சஸ்பெண்ட்: கடந்த மாதம்கூட, நிபந்தனை விதித்து பணம் வாங்கியதாக கே.வி.குப்பம் சார்பதிவாளரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தார்.. அதேபோல, தன்னுடைய அறையில் உள்ள அகண்ட திரையில் மாநிலம் முழுவதும் உள்ள முக்கியமான பதிவுத்துறை அலுவலகங்களை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்தும் வருகிறார்.
இப்படித்தான் நேற்று மாலை 6 மணி அளவில், ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த பணிகளை சிசிடிவியில் பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது, ஒருவர் அலுவலகத்துக்குள் நுழைந்து, நேராக சார்பதிவாளர் ராணியின் ரூமுக்குள் செல்கிறார்..
பணக்கட்டுகள்: கையில் கொண்டு வந்திருந்த ஒரு பைக்குள் கையைவிட்டு, பணக்கட்டுகளை வெளியே எடுத்து, ராணியிடம் கொடுக்கிறார். அந்த பணக்கட்டுகளையும் ராணி கைநீட்டி வாங்கி, தன்னுடைய பைக்குள் வைத்துக்கொள்கிறார்.. கொஞ்ச நேரத்தில் இன்னொருவர் வருகிறார்.. அவரும் நேராக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் 2 பேரிடம் பணம் தருகிறார்கள்.. அவர்களும் அந்த பணத்தை வாங்கி தங்களது பைக்குள் வைத்துக் கொள்கிறார்கள்.
இதை பார்த்ததுமே அதிர்ச்சி அடைந்த பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்... அத்துடன், கையும் களவுமாக பதிவுத்துறை ஐஜியே பிடித்ததால், சார் பதிவாளர் ராணியை, அடுத்த அரை மணி நேரத்திலேயே சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்... ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 2 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்..
முதல்முறை அதிரடி: அலுவலகத்தில் வைத்தே, அதிகாரிகள் சிசிடிவியில் கண்காணிக்கிறார்கள் என்று தெரிந்தும், துணிச்சலாக லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இதுபோன்று அலுவலகத்திலுள்ள சிசிடிவி கேமராவில் சிக்கி சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுதான் முதல்முறையாகும்.
சமீபத்தில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சார்பதிவாளராக உள்ள கவிதா, ஒரு புரோக்கரிடம் லஞ்சப்பணம் கேட்டு பேரம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது.. அதாவது, முறைகேடாக பதிவு செய்ய ரூ.25 ஆயிரம் வேண்டும் என்று கவிதா நிபந்தனை விதிக்கிறார்.. ஆனால் அவ்வளவு தர முடியாது என்றதுமே, சரி குறைவாக கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன். அடுத்தமுறை கூடுதலாக தரவேண்டும் என்று பேரம் பேசியிருந்தார் கவிதா.
உண்மைத்தன்மை: இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார் பதிவுத்துறை தலைவர்.. இறுதியில் கவிதா லஞ்சம் வாங்கியது உண்மை என்று தெரிந்ததால், கவிதாவையும் சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டிருக்கிறார்.. அந்தவகையில், பதிவுத்துறையில் லஞ்சம் வாங்கியதற்காக நேற்று 2 சார்பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது, பதிவுத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications