பாவம் அவர்கள்; கைவிட்டுவிட வேண்டாம்; அரசுக்கு வேல்முருகன் வேண்டுகோள்!
சென்னை: கொரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் உட்பட மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை தனக்கு மிகுந்த வேதனையை தருவதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா பாதிப்பு
கொரோனாவின் பாதிப்பு தமிழ்நாட்டில் அதிகளவில் இருந்தபோது, தற்காலிகமாக மருத்துவர்களும், செவிலியர்களும் , சுகாதார ஆய்வாளர்களும், மருத்துவப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிறந்த முறையில் சேவையாற்றினர்.
செவிலியர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உறவினர்களே செல்ல தயங்கி நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் தாயுள்ளதோடு செயலாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களுமே. மேலும், சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், டெங்கு போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும் சிறந்த முறையில் செயலாற்றியுள்ளனர்.

மருத்துவர்கள் செவிலியர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உறவினர்களே செல்ல தயங்கி நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் தாயுள்ளதோடு செயலாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களுமே. மேலும், சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், டெங்கு போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும் சிறந்த முறையில் செயலாற்றியுள்ளனர்.

வேதனை
அவர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத இச்சூழலில், இம்மாத இறுதியுடன் பணியில் இருந்து நின்று விடுமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, எழுத்துப் பூர்வமாகவும், வாய்மொழியாகவும் அவர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இத்தகையை நடவடிக்கை பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.

3-வது அலை
கொரோனா மூன்றாவது அலைக்கான எச்சரிக்கையை நிபுணர்கள் விடுத்த நிலையில், ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது அதிர்ச்சி அளிக்கிறது.எனவே, ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும். பல மாதங்களாக நிலுவையில் உள்ள அவர்களின் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications