"நீட் சமூக அநீதி தேர்வு! கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்" -வேல்முருகன் ஆவேசம்
சென்னை: நீட் விலக்கு தொடர்பாகத் தமிழக சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், பண்ருட்டி வேல்முருகன் சட்டசபையில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்
நீட் பாதிப்பு குறித்து ஏகே ராஜன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா கடந்த செப். 13ஆம் தேதி தமிழக சட்டசபையில் முழு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் அனுப்பப்பட்டது.
சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, இந்த நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதையடுத்து இந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றச் சிறப்புச் சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது.

பண்ருட்டி வேல்முருகன்
இன்று நீட் விலக்கு மசோதாவில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் சட்டசபையில் பேசுகையில், "சமூகநீதியின் பிறப்பிடமாக உள்ள தமிழ்நாட்டில் இருந்து, தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாவைத் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைப்பது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. 8 கோடி பேரின் பிரதிநிதித்துவம், தமிழக சட்டசபை இயற்றியுள்ள இந்த சட்ட மசோதாவை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதுதான் அவரது அரசியல் கடமை.

அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிரானது
மாநில அரசு அனுப்பும் சட்ட மசோதாக்கள் மாநிலப் பட்டியலில் இருந்தால், அதனை ஆளுநர் மறு ஆய்வுக்கு அரசுக்குத் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு உரிமை உள்ளது. ஆனால் மத்திய அரசு பட்டியலில் இருப்பதையும் பொதுப் பட்டியலில் இருப்பதையும் ஆளுநர் திருப்பி அனுப்புவது என்பது இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிரான செயல். சமூகநீதி கோட்பாட்டைக் காக்க ஒரு மாநிலம் எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பது சரி அல்ல.

அதிமுக அரசு
நீட் தேர்வு காரணமாகப் பல ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் படிக்க இடம் கிடைத்துள்ளதாகக் கூறுவது முற்றிலும் தவறு. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5 இட ஒதுக்கீடு காரணமாகவே ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி, நீட் தேர்வுக்குப் பதிவு செய்த லட்சக் கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. நீட் தேர்வைக் கண்டு மாணவர்கள் அஞ்சும் நிலையே உள்ளது.

சமூக அநீதியான ஒரு தேர்வு
நீட் தேர்வு மருத்துவ படிப்புகளுக்கான கொள்ளைகளை நிறுத்தவில்லை. நீட் கோச்சிங் செனடர்களில் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அதேபோல பிஜி மருத்துவ படிப்புகளுக்கும் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. இப்படி லட்சக் கணக்கில் செலவு செய்தால் தான் மாணவர்கள் மருத்துவர் ஆக முடியும் என்ற சூழலை நீட் ஏற்படுத்தி உள்ளது. நீட் என்பது சமூக அநீதியான ஒரு தேர்வு.. ஏழை மாணவர்களை நுழைய விடாத தேர்வு. எனவே இதை நாம் ஒழிக்க வேண்டும்.
Recommended Video

மீண்டும் மாநில பட்டியல்
அனிதா தொடங்கி 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். நீட் தேர்வு என்பது ஏழை கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்களை மருத்துவக் கல்விக்குச் செல்வதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது தான். எனவே, நீட் தேர்வு முறையைத் தகர்த்து எறிய வேண்டும். இந்த நீட் விலக்கு மசோதாவுக்குத் தமிழக வாழ்வுரிமை கட்சி முழு ஆதரவைத் தரும். இத்துடன் நில்லாமல், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவரவும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications