சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேல்முருகன் வேட்டை ஆரம்பம்.. வாழ்வுரிமை கட்சியில் காடுவெட்டி குரு தங்கை, வீரப்பன் மனைவி!

காடுவெட்டி குருவின் சகோதரி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தலில் வேல்முருகன் போட்டியிடவும் இல்லை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கவும் இல்லை.. ஆனால் இந்த முறை வேல்முருகனின் தாக்கம் அதிகமாகவே வெளிப்படும் என தெரிகிறது!

கட்சி துவங்கிய காலத்தில் இருந்தே தமிழக மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்தவர் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். இதற்காக நிறைய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துள்ளார். குறிப்பாக வட மாவட்டங்களில் இவருக்கு செல்வாக்கு அதிகம்.

தென் தமிழகத்தில் அழகிரி உறுமிக் கொண்டிருக்க, வட தமிழகத்திலும் நிலைமை மோசம் என்பதை உணர்ந்த திமுக. வேல்முருகனை அணுகியதாலோ என்னவோ, கடைசி நேரத்தில், அக்கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

எங்கிருந்தோ பறந்து வந்த செருப்பு.. எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஷாக் எங்கிருந்தோ பறந்து வந்த செருப்பு.. எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஷாக்

வேல்முருகன் ஆதரவு

வேல்முருகன் ஆதரவு

அப்போதே வன்னிய ஓட்டுக்கள் திமுகவுக்கு சாதமாக விழும் எல்லா முயற்சிகளையும் இனி வேல்முருகன் இறங்கி எடுப்பார் என்றே நம்பப்பட்டு விட்டது. வட மாவட்டத்தில் பாமகவுக்கு இணையாக இல்லாவிட்டாலும் கணிசமான வாக்குகள் வேல்முருகனுக்கு உள்ளது. மற்றொரு பக்கம் காடுவெட்டி குரு ஆதரவாளர்களும் வேல்முருகனுக்கு துணையாக இருக்கிறார்கள்.

முத்துலட்சுமி

முத்துலட்சுமி

இதை உறுதிப்படுத்துவது போலத்தான் காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளார். இவருடன் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் இணைந்துள்ளார்.

ஏகே மூர்த்தி

ஏகே மூர்த்தி

"இந்த 11 வருஷமாக மத்திய அமைச்சரவையில் இருந்த அன்புமணியும், ஏ.கே.மூர்த்தியும் வன்னிய மக்களின் இட ஒதுக்கீடு குறித்து வாயை திறந்திருப்பார்களா? என கேள்வி எழுப்பிய வேல்முருகன்,
இவர்கள் இருவர் மீதும் ஒரு துரும்பு கூட விழாமல் பார்த்துக்கொள்வேன்" என்றார். இதையடுத்து, ராமதாஸ், ஜிகே மணி ஆகியோர் இழைத்த அநீதிக்கு நாங்கள் பாடம் புகட்டுவோம் என முத்துலட்சுமியும் செந்தாமரையும் சபதமே போட்டுவிட்டார்கள்.

அதிர்ந்த பாமகவினர்

அதிர்ந்த பாமகவினர்

இவர்கள் 2 பேருமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றாலும் பாமகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாமகவின் ஓட்டுக்களை பிரிக்க வேல்முருகனின் தற்போதைய அஸ்திரம்தான் இவர்கள் இருவரும்! " திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு", "குருவின் குடும்பத்தை தன் பக்கம் இழுத்து கொண்டது" என வேல்முருகனின் ஒவ்வொரு செயலையும் கண்டு பாமகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருமாவளவன்

திருமாவளவன்

இதனால் தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். இது எல்லாவற்றிற்கும் மேலாக திருமாவளவனுக்கும், வேல்முருகனுக்கும் நல்ல இணக்கமான நட்பு உள்ளதால், சிதம்பரம் தொகுதியை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. வட மாவட்டங்களில் ஏற்கனவே குறிப்பிட்ட வாக்கு வங்கியை வேல்முருகன் வைத்துள்ளார்.

சுருக்கமாக சொல்ல போனால், பாமக பெல்ட்டில் உள்ள வேல்முருகனை வைத்து வாக்குகளை அள்ளப் போகிறது திமுக!

English summary
Kaduvetti Gurus sister has joined in Velmurugans Party and going to compaign against for PMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X