வேங்கைவயல் கிராமத்தில் உண்மையில் என்ன நடந்தது? ஏ டூ இசட்.. போலீசார் அளித்த முக்கிய விளக்கம்
சென்னை: வேங்கைவயல் கிராம வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக போலீஸ் முக்கிய விளக்கம் அளித்து உள்ளது.
கனகராஜ், 43/2022, S/o. ரெங்கசாமி, வேங்கைவயல் கிராமம் (வெள்ளானூர் காவல் நிலையம்) புதுக்கோட்டை மாவட்டம் என்பவர், கிராம குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி மேல்நிலை நீர்த்தேக்க நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதன் பேரில், வெள்ளானூர் PS Cr.No.239/2022, U/s. 277, 328 IPC மற்றும் 3(1)(b), 3(1)(x), 3(2)(v a) SC/ST (POA) Act 1989 இல் 26.12.2022 -ஆம் தேதி மதியம் 3 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 397 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது.
சாட்சிகளை விசாரித்ததைத் தவிர, சுமார் 196 மொபைல் எண்கள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை உள்ளடக்கிய 87 டவர் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டது. இது தவிர, கிராம மக்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு விரிவான டி.என்.ஏ பகுப்பாய்வு செய்யப்பட்டது. மலம் கலந்த மாசுபட்ட நீரை குடித்ததால் சிகிச்சை பெற்ற குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 0210.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் திருமதி.பத்மா அவர்களின் கணவர் திரு.முத்தையா அவர்கள் கிராமசபைக் கூட்டத்தின் போது, வேங்கைவயல் காவலர் முரளிராஜாவின் தகப்பனார் ஜீவானந்தம் அவர்களை விசாரணையின் போது தெரியவந்தது. மேலும் இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது புலனாகிறது.
அவமானப்படுத்தியது.
மேலும், திரு. முரளிராஜா, திரு. சுதர்ஷன், திரு. முத்தையா, திரு. ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அழிக்கப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் மீட்கப்பட்டன, இது நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியது.
புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்த பின்னர், புலன் விசாரணை முடிக்கப்பட்டு (i) திரு. முரளிராஜா, த/பெ. ஜீவாநந்தம், 32/23, வேங்கைவயல், (ii) திரு. சுதர்ஷன் 20/23, த/பெ. பாஸ்கரன், வேங்கைவயல் மற்றும் (iii) திரு. முத்துகிருஷ்ணன் 22/23, த/பெ. கருப்பையா, வேங்கைவயல் ஆகியோரின் மீது பட்டியல் சாதியினர்/பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) 1989 . ன் கீழ் வழக்குகளை விசாரணை செய்யும் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில், 20.01.2025 அன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications