சென்னையில் நடந்த விழா.. தமிழ்நாடு காவல்துறையிடம் வழங்கப்பட்ட ஜனாதிபதி கொடி! ஏன்? - பின்னணி
சென்னை: தமிழ்நாடு காவல்துறைக்கு சிறப்பு மிகு ஜனாதிபதி கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு விழா தொடங்கியது. முன்னதாக சென்னை எழும்பூரின் ராஜரத்தின மைதானம் அமைந்துள்ள பகுதிகளில் வாகன போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

துணை ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை
தொடந்து விழா தொடங்கியதும், இந்திய துணை ஜனாபதி வெங்கையா நாயுடுக்கு தமிழக போலீசாரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் தமிழக காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றார். தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஜனாதிபதி கொடியை வழங்கினார். ஜனாதிபதி கொடியை பெற்றுக்கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அதனை, டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வழங்கினார். டிஜிபி சைலேந்திர பாபு துணை ஜனாதிபதி கொடியை பெற்றுக்கொண்டு அதை தமிழக போலீசாருக்கு காண்பித்தார்.

ஒரெ அடையாளம்
இந்நிகழ்ச்சியில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உள்துறை செயலாளர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், டிஜிபிக்கள், கூடுதல் டிஜிபிக்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் எஸ்பிக்கள் என காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் இனி டிஜிபி முதல் கடை நிலை போலீசார் வரை அனைத்து போலீசாருக்கும் ஒரே மாதிரியான அடையாளமாக ஒரு லோகா வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் ஒரே மாதிரியான லோகோ வழங்கப்படுகிறது. இதனை போலீசார் தங்களது சீருடையின் இடது தோள்பட்டை பகுதியில் ஒட்டிக்கொள்ளலாம்.

புதிய லோகோ
தமிழ்நாட்டில் காவலர் முதல் டிஜிபி வரை அனைவருக்கும் காக்கி நிறச் சீருடை இருந்தாலும், அவரவர் பதவியின் அடிப்படையில் சீருடை மாறுபட்டு இருக்கும். ஆனால் பொதுவாக தமிழ்நாட்டு போலீசாருக்கு என ஒரு அடையாளமாக இந்த லோகோ இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய லோகோவில், தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் மற்றும் அசோக சின்னத்துடன் இந்திய தேசியக் கொடி ஆகியவற்றுடன் தமிழ்நாடு காவல் என்ற வார்த்தையும் உள்ளது.

தென்னிந்தியாவில் முதல் மாநிலம்
தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய கவுரவமாகும். இந்தியாவில் இதுபோன்ற சிறப்பு கொடியினை இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications