மாநாடு நாளை திட்டமிட்டபடி ரிலீஸ்.. இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட்! குஷியில் சிம்பு ஃபேன்ஸ்!
சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார்,
வெங்கட் பிரபு எழுதி இயக்கி, சுரேஷ் காமாட்சி தயாரித்த சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் மாநாடு.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் எஸ். ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மாநாடு
முதலில் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்தத் திரைப்படம், பின்னர் நாளை (நவ. 25) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் சில தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு திரைப்பட ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாகப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த சில மணி நேரத்திற்கு முன் ட்வீட் செய்திருந்தார்.

சுரேஷ் காமாட்சி ட்வீட்
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதில் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்

நாளை ரிலீஸ் கன்பார்ம்
இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் சோகமடைந்தனர். இந்தச் சூழலில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றைத் தனது ட்விட்டரில் பகிர்ந்ததுள்ளார். மாநாடு திரைப்படத்திற்கு அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ள வெங்கட் பிரபு, #MaanaaduFrom25thNovember #maanaadu ஆகிய ஷேஷ்டேக்குகளை பயன்படுத்தியுள்ளார்,

உற்சாகம்
மேலும், வெங்கட் பிரபு பகிர்ந்துள்ள மாநாடு போஸ்டரிலும் படம் நாளை வெளியாகும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாவது உறுதியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
|
தயாரிப்பு நிறுவனம்
அதேபோல மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான JSK Film corporationஇன் சதீஷ்குமாரும் தனது ட்விட்டரில் மாநாடு திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என பதிவிட்டுள்ளார். டைம் டிராவல் கான்சேப்டை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மாநாடு திரைப்படத்தின் மீது மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications