"ஹவுசிங்போர்டு" அனிதாவா இது.. கிரஹபிரவேசத்தில் சிதறிய ஆனந்த கண்ணீர்.. ஒரே வீடியோ.. பூரித்த ரசிகர்கள்
அனிதா சம்பத் புது வீடு கிரஹபிரவேசம் செய்த வீடியோ பதிவிட்டுள்ளார்
சென்னை: ஓட்டு வீட்டுல பிறந்து வளர்ந்த பிரபாவா, ஓட்டு வீட்டு மேல ஏறி உட்கார்ந்து தரைய பார்த்து நாமளும் மாடி வச்ச வீட்டுக்கு வாடகைக்காவது போக மாட்டோமானு ஏங்குன பிரபாவா இருந்தேன்.. இன்னைக்கு அது நிறைவேறிடுச்சு.. இதோ இதுதான் என் முதல் குழந்தை" என்று பூரித்து சொல்கிறார் அனிதா சம்பத்.
டிவியில் நியூஸ் ரீடராக பிரபலமானவர் அனிதா சம்பத்.. இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு.. நிறைய பேர் இவரை பின்தொடர்வதால், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம், இன்னும் பெரிய அளவில் பிரபலமானார்... ஆரம்பத்தில், பிக்பாஸ் வீட்டில் நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே அதிகம் பெற்றார்..
இந்த அனிதா வாயை திறந்தால் மூடுவதில்லை, சின்ன விஷயத்தையும் பெரிதாக்குகிறார் என்ற விமர்சனங்கள் நேரடியாகவே அனிதாவை தாக்கின.. எதிர்மறை கருத்துக்கள் தன் மீது வீசப்படுவதை உணர்ந்த அனிதா, அதற்கு பிறகு நிறுத்தி நிதானமாக விளையாடினார்.. தன்னுடைய கருத்துக்களை தெளிவாக முன்வைத்தார்.. நியாயமாக விளையாடினார்.. இதனால், இவருக்கு ரசிகர்கள் கூடினர்.

ஹார்ட் அட்டாக்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அடுத்த நாளிலேயே, அனிதாவின் அப்பா உயிரிழந்தார்.. மிகப்பெரிய அதிர்ச்சி மற்றும் மனஅழுத்தத்தில் இருந்து அனிதாவால் விடுபட முடியவில்லை.. அதனால், செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை தொடராமல் ஓய்விலும் இருந்தார்.. பின்னர், பிக் பாஸுக்கு பிறகு கணவர் உடன் சேர்ந்து யூடியூப் சேனல் நடத்தி வரும் நிலையில், அடிக்கடி பர்சனல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்..

நொறுங்கிய இதயம்
அனிதாவை பொறுத்தவரை எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்.. வாழ்க்கையில் எந்த அளவுக்கு தான் கஷ்டப்பட்டோம் என்பதை, பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றபோதே, அனைத்தையும் தெரிவித்திருந்தார்.. தன் வறுமையை பற்றியும், தன் அம்மாவை பற்றியும் சொல்லும்போதெல்லாம் கண்ணீர் உடைந்து கொட்டியதை காணமுடிந்தது.. இவ்வளவு கஷ்டப்பட்ட அனிதா, தன் உழைப்பாலும், திறமையாலும் இன்று உயர்ந்துள்ளார்.. அதன் பலனாகவே, சமீபத்தில் புது வீடு ஒன்றையும் கட்டி கிரகபிரவேசம் நடத்தியுள்ளார்..

கிரஹப்பிரவேசம்
ஏகப்பட்ட குஷியில் அனிதா இருக்கிறார்.. இந்த புது வீட்டை சுற்றிக்காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் அனிதா.. இந்த வீடு குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார். அனிதா சொல்லும்போது, ஹவுசிங்போர்டு குவார்ட்டர்ஸ் அனிதாவா? 5 வீட்டுக்கு ஒரு பாத்ரூம்னு, காமன் பாத்ரூம் காலனியில் வாழ்ந்து பழகுன அனிதாவா? வாடகை கூட தர முடியாமல் வீட்ட காலி பண்ணிட்டு, காலேஜ் பார்மில் என்ன அட்ரஸ் எழுதுவது என தெரியாமல் அழுத அனிதாவா? காலில் ஓட்டை விழுந்த தேய்ந்த செருப்பு போட்டுக்கிட்டு, கொதிக்கிற ரோட்டுல டியூஷன் எடுக்க நடந்து போன அனிதாவா? வான நானும்....

எதிர்நீச்சல்
ஓட்டு வீட்டில் பிறந்து வளர்ந்த பிரபாவா? ஓட்டு வீட்டு மேல ஏறி உட்கார்ந்து தரையை பார்த்து நாமளும் மாடி வைத்து வீட்டுக்கு வாடகைக்காகவது போக மாட்டோமான்னு ஏங்குன பிரபாவா இருந்த என்னவனும், நிறைய தடைகளையும் வலிகளையும் கனவுகளையும் சுமந்து, வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு , "நேர்மையா" சம்பாதித்த காசில் கட்டுன எங்களின் கனவு இல்லம். இது வீடு இல்லை.. இது எங்க முதல் குழந்தை.. கிரகப்பிரவேசத்துக்கு எல்லாரையும் கூப்பிட முடியல.. இப்ப எங்க சிறிய வீட்டை உங்களுக்கும் காட்டுறோம்... ஆசீர்வாதம் பண்ணுங்க என்று அனிதா ஒரு வீடியோ கூறியுள்ளார்..

கிரஹப்பிரவேசம்
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும், பொதுமக்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 'திறமை உங்களை இன்னும் மேலே உயர்த்தும் அனிதா' என்று பாராட்டி வருகிறார்கள்.. எந்த ஒரு செயலுமே உழைப்பினால் தான் சிறப்பு அடைகிறது... வெற்றியை உருவாக்குவதில் மிகப்பெரிய மூலதனமே உழைப்புதான்.. அந்த உழைப்புதான் இன்று அனிதாவையும் வெற்றியில் ஆழ்த்தி மகிழ்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.. !
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications