சைதாப்பேட்டை ரயில் நிலைய பெண் கொலை வழக்கில் திடுக் திருப்பம்.. கொலைக்கு முன்பு கும்பலின் பகீர் செயல்
சென்னை: சென்னை சைதாப்பேட்டை பெண் கொலை வழக்கில் திடுக் தகவலாக கொலைக்கு முன்பு அந்த பெண்ணிடம் வழக்கு செலவுக்காக கொள்ளை நடத்தப்பட்டதாக அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
சென்னை மின்சார ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தவர் ராஜேஸ்வரி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பயணம் செய்து சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.

அப்போது அதே ரயிலில் இறங்கிய 4 பேர் ராஜேஸ்வரியை வழிமறித்துள்ளனர். அவர்களில் ஒருவர் ராஜேஸ்வரியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு மீண்டும் அதே ரயிலில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஸ்வரியை அங்கிருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். கொலை தொடர்பாத ரயில்வே போலீஸார் மற்றும் சைதாப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனாலும் இந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் இருந்தது. மேலும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லாததாலும் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ராஜேஸ்வரியிடம் இருந்து பணமோ நகையோ திருடு போகவில்லை. எனவே வந்திருந்தவர்கள் நிச்சயம் ராஜேஸ்வரிக்கு தெரிந்தவர்களாக இருக்கும் என போலீஸார் சந்தேகித்தனர்.
இதையடுத்து போலீஸார் விசாரணையில், ராஜேஸ்வரியின் தங்கை மீது சந்தேகப் பார்வை திரும்பியது. இதையடுத்து இந்த சம்பவத்தில் தங்கை நாகவள்ளிதான் மாஸ்டர் மைண்ட்டாக இருந்துள்ளார். அவருக்கு சக்திவேல் என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த ராஜேஸ்வரி, தங்கை நாகவள்ளியை கண்டித்தார்.
ராஜேஸ்வரிக்கு 4 கணவன்கள் உள்ளனராம். அது போல் நாகவள்ளிக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருந்து வரும் நிலையில் சக்திவேலுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. ராஜேஸ்வரி எத்தனையோ முறை கண்டித்தும் நாகவள்ளி கேட்கவில்லையாம். இதனால் ராஜேஸ்வரி இப்படியே செய்தால் உன்னை ஒரு நாள் கழுத்தை திருகி போட்டுவிடுவேன் என அச்சுறுத்தியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த நாகவள்ளி, தனது உயிர் பயத்தாலும் கள்ளக்காதலை தொடர முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தாலும் அக்காவுக்கு முன்பு அவரை கொல்லலாம் என திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக அவர் தனது கள்ளக்காதலன் சக்திவேலுடன் பிளான் செய்துள்ளார். இந்த கள்ளக்காதல் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் உஷாரானார்கள்.
இதனிடையே ராஜேஸ்வரியின் இறுதி ஊர்வலத்தில் நாகவள்ளி சிறிதும் துக்கம் இன்றி தாரை தப்பட்டை ஆட்டத்திற்கு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. போலீஸாருக்கு கிடைத்த தகவலும் நாகவள்ளியின் குத்தாட்டமும் சிங்க் ஆனதால் போலீஸார் நாகவள்ளியை தனியே அழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து நாகவள்ளி, சூர்யா, ஜெகதீசன், சக்திவேல், ஜான்சன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் ராஜேஸ்வரியை கொலை செய்வதற்கு முன்பு அந்த கும்பல் அவரிடம் வழக்குச் செலவுக்காக கொள்ளையும் அடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications