9 வயதில் போராட்டக் களத்திற்கு வந்த சங்கரய்யா.. தலைமறைவு வாழ்க்கை.. 93 ஆண்டு கால பொதுவாழ்வு பயணம்!
சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய 36 தலைவர்களில் ஒருவரான என்.சங்கரய்யா இன்று காலமானார். தனது 9 வயதில் முதல் முறையாக போராட்டக் களத்தில் இறங்கிய சங்கரய்யா, தன் வாழ்நாள் முழுவதும், மக்கள் போராட்டங்களுக்காக முன்னின்றவர்.
1922ஆம் ஆண்டு ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தவர் சங்கரய்யா. மாணவப் பருவத்திலேயே விடுதலை வேட்கையை நெஞ்சில் சுமந்தவர். 1931ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங்கிற்கு ஆங்கிலேயர்களால் அளிக்கப்பட்ட மரண தண்டனை நாட்டை போராட்டக் களமாக்கிய போது, 9 வயதே ஆன சின்னஞ் சிறுவனான சங்கரய்யாவும், தூத்துக்குடி டவுனில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்ட முழக்கம் எழுப்பினார். அதுதான் சங்கரய்யாவின் முதல் சங்கநாதம்.

1937 வாக்கில் அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோது, மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் முன்னின்றார் சங்கரய்யா. சுயமரியாதை இயக்கம் மீது பெரும் மரியாதை வைத்திருந்த சங்கரய்யா, 1938-ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டினார்.
1941ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடியதற்காக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் மீனாட்சி கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் கூட்டம் நடத்தப்பட்டது. சங்கரய்யாவின் செயல்பாடுகளை விரும்பாத கல்லூரி நிர்வாகம் அவரைக் கல்லூரியிலிருந்து நீக்க முடிவு செய்தது. இதையடுத்து சங்கரய்யாவுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் மாணவர்கள் களமிறங்க, தனது முடிவை மாற்றிக்கொண்டது கல்லூரி நிர்வாகம்.
சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றிருந்த சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அழைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றச் செய்தார். அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் சங்கரய்யா கைதானார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது படிப்பு பாதியில் நின்றது. சங்கரய்யாவை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற அவரது தந்தையின் கனவும் பாதியில் நின்றது. பின்னர் தொடர்ச்சியாக போராட்டங்களில் பங்கேற்றார் சங்கரய்யா.
'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின்போது நெல்லையில் மாணவர்களைத் திரட்டி பேரணி நடத்தினார். பேரணியின்போது தடியடியில் காயமடைந்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால் 1948ஆம் ஆண்டு முதல் 1951 வரை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். இந்தியா முழுவதும் பல இடங்களில் தலைமறைவாக வாழ்ந்துள்ளார் சங்கரய்யா.
இந்தியா விடுதலை அடைந்த பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். 1964ஆம் ஆண்டு, கருத்து வேறுபாடு காரணமாக கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினர். அவர்களில் சங்கரய்யாவும் ஒருவர். பொதுவுடைமை இயக்கத்தின் தமிழ் நாளிதழான ஜனசக்தி' நாளிதழின் முதல் பொறுப்பாசிரியர் சங்கரய்யாதான். தீக்கதிர்' நாளிதழின் முதல் ஆசிரியரும் இவரே.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்து தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண போராட்டம், ஆலை தொழிலாளர்களின் எண்ணற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். கொள்கை பிடிப்புடன் சாதி மறுப்பு திருமணத்தை மேடையில் மட்டும் பேசாமல் தன்னுடைய குடும்பத்திலேயே நடத்தினார்.
தன்னுடைய வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கையும், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அவர் 3 முறை மதுரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கிராமங்களில் ரேஷன் கடைகள் அமைப்பது குறித்தும், சுயமரியாதை திருமணம் நடப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். சாதி மறுப்பு திருமணங்கள், தீண்டாமை ஒழித்தல், தொழிலாளர் உரிமை ஆகியவற்றுக்காகப் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார் சங்கரய்யா.
90 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு செயலாற்றிய சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா இன்று வயது முதிர்வின் காரணமாக மறைந்தார். 9 வயதில் போராட்டக் களத்திற்கு வந்த சங்கரய்யா, தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக களத்தில் நின்று 102 வயதில் இன்று மறைந்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications