“விசிட்” அடித்த வெற்றிமாறன்.. திருமாவளவன் தமிழில் வெளியிட்ட மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் காண வருகை
பிபிசி வெளியிட்ட மோடி குறித்த ஆவணப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு திரையிடலை இயக்குநர் வெற்றிமாறன் பார்வையிட்டார்.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தலையீடு 2002 குஜராத் கலவரத்தில் இருப்பதாக கூறி பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை, "இந்தியா: மோடி என்கிற கேள்வி" என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டு திரையிட்ட நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் வருகை தந்து பார்வையிட்டார்.
கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் அரங்கேற்றப்பட்ட மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். பலர் காணாமல் போயினர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இந்த மத வன்முறை உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது குறித்து பிரிட்டன் அரசின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாக கொண்ட புகழ்பெற்ற பிபிசி தொலைக்காட்சி, "இந்தியா: தி மோடி குவெஸ்டீன்" என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.

தடை விதித்த மத்திய அரசு
பிரதமர் மோடியின் பங்கு குஜராத் கலவரத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து, 2 பாகமாக வெளியாகி உள்ள பிபிசியின் இந்த ஆவணப் படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் காரணமாக யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் இந்திய தொலைக்காட்சிகளில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்படவில்லை.

மீறப்பட்ட தடை
வெளிநாடுகளில் இந்த ஆவணப்படத்திற்கு தடை விதிக்கப்படாத காரணத்தால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் பிற நாட்டாவர்கள் அதை கண்டு கருத்து தெரிவித்து உள்ளனர். இந்தியாவில் வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட மெசேஜிங் தளங்களில் பிபிசியின் இந்த ஆவணப்படம் பகிரப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆவணப்படம் பார்க்கும் போராட்டங்கள் நடைபெற்றன.

DYFI திரையிடல்
சென்னையில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு சார்பில் இந்த ஆவணப்படம் பார்க்கும் போராட்டம் நடைபெற்றது. சென்னையை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெண் கவுன்சிலர் இதில் பங்கேற்று சாலையில் அமர்ந்து செல்போனில் இந்த ஆவணப்படம் பார்த்ததற்காக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டியக்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த ஆவணப்படத்தை போலீஸ் அனுமதியுடன் திரையிட்டனர்.

நாகையில் திரையிட்ட காங்கிரஸ்
நாகப்பட்டினம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பிபிசியின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதனை எதிர்த்து பாஜகவினர் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் - பாஜக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் மோதலை பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் ஆவணப்பட திரையிடலை பாதியில் நிறுத்தப்பட்டது.

திருமாவளவன் வெளியிட்ட தமிழ் வெர்சன்
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்த ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து திரையிடப்போவதாக அறிவித்தார். அந்த வகையில் இன்று சென்னை அம்பேத்கர் திடலில் "இந்தியா: மோடி என்கிற கேள்வி" என்ற பெயரில் பிபிசி ஆவணப்படத்தை திருமாவளவன் தமிழில் வெளியிட்டார்.

வெற்றிமாறன் பங்கேற்பு
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி, திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்வில் வெற்றிமாறன் கலந்துகொண்டு மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை தமிழில் பார்வையிட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications