குறி வச்சா இரை விழனும்.. நாளைக்கு தலைவர் தரிசனம்! வர்றாரு வேட்டையன்.. தமிழக அரசின் ஸ்வீட் சர்ப்ரைஸ்
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் புதிய படம் வேட்டையன். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் அக்டோபர் பத்தாம் தேதி ஆயுத பூஜையை குறிவைத்து இந்த படம் வெளியாகிறது.

லைகா ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமல்லாது, அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம் பெற்று இருந்த மனசிலாயோ பாடல் வெளியாகி ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்தது. ஓணம் பண்டிகையோடு பாடல் வெளியாக பலரும் ரீல்ஸ் போட்டு இன்ஸ்டாகிராமை திணற வைத்தனர். இந்த நிலையில் அடுத்து ஹண்டர் வர்றார் பாடலும் வெளியானது. இந்த நிலையில் வேட்டையன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான புக்கிங் நடைபெற்று வருகிறது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பதும், பகத் பாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து இருப்பதும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது, அதே நேரத்தில் படத்தின் ப்ரீ புக்கிங் மந்தமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நிறைய தியேட்டர்களில் இன்னும் டிக்கெட் மந்தமாகவே விற்பனை ஆகிறது. நிறைய திரையரங்குகளில் ஏராளமான ஷோக்களுக்கு டிக்கெட் முழுமையாக விற்பனை ஆகவில்லை. இந்த நிலையில் ரசிகர்களுக்காக தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன் படி வேட்டையன் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ரஜினிகாந்த் படம் என்றாலே எப்போதும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தோடு இருப்பார்கள். அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி தருமா என திரையரங்க உரிமையாளர்களும் ரசிகர்களும் ஆர்வத்தோடு காத்திருந்தனர். இந்த நிலையில் அவர்களது கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் நாளை தமிழகத்தில் சுமார் 800 திரைகளுக்கு மேல் வேட்டையன் படம் திரையிடப்படும் நிலையில் அந்த தியேட்டர்களில் ஒரு நாள் மட்டும் ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் காலை ஒன்பது மணிக்கு முதல் காட்சியை தொடங்கிக் கொள்ளலாம் என அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications