பதற வைக்கும் சித்தார்த்தா மரணம்.. அப்படியே "பைவ் ஸ்டார் துரோகம்" கதை போலவே சம்பவங்கள்!
ராஜேஷ்குமார் கதை போலவே சித்தார்த்தா மரணமும் அமைந்துள்ளது
Recommended Video
சென்னை: திகில் கதை மன்னன் ராஜேஷ்குமார் நமது ஒன்இந்தியா தளத்தில் ஒரு தொடர் எழுதியிருந்தார். கிட்டத்தட்ட அதில் வந்த சம்பவங்கள் போலவே வி ஜி சித்தார்த்தாவின் மரணம் அமைந்திருப்பது பெரும் துயரமாக உள்ளது.
எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல்களில் வரும் சம்பவங்கள் எல்லாமே நிஜ வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு தாக்கத்தையோ அல்லது பதிவையோ ஒட்டியிருக்கும். ஆனால் அதில் வந்த கற்பனை சம்பவங்கள் நிஜத்தில் நடந்திருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. சோகமாகவும் உள்ளது.

கபே காபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் மரணம் நாடு முழுவதும் பெரும் சோக அலையை பரப்பியுள்ளது. இப்படி ஒரு முடிவை அவர் ஏன் எடுத்தார் என்றே பலரும் ஆதங்கப்படுகின்றனர். இந்த நிலையில்தான் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் கதையின் சாயல்கள் பல இந்த சம்பவத்திலும் இருப்பது நமக்கு மனதில் பட்டது.
ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய தொடர்தான் பைவ் ஸ்டார் துரோகம். இந்தத் தொடரின் முக்கிய சம்பவம் அதில் வந்த அமைச்சரின் மருமகன் மரணம், ஐடி ரெய்டுகள், ஆட்சி மாற்றம் உள்ளிட்டவைதான். கிட்டத்தட்ட சித்தார்த்தாவின் மரணத்திலும் கூட இவை எல்லாம் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன்தான் சித்தார்த்தா. பைவ் ஸ்டார் தொடரின் கதையிலும் கூட ஐடி ரெய்டு வரும் மரணத்திற்கு முன்பாக. சித்தார்த்தாவின் வாழ்க்கையிலும் இது நடந்துள்ளது. கதையிலும் ஆட்சி மாற்றம் வந்தது. நிஜத்திலும் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் வந்தது.
இவை எல்லாமே தற்செயல்தான். ஆனால் நிழலில் நடந்த எல்லாமே கிட்டத்தட்ட நிஜத்திலும் நடந்திருப்பதுதான் பெரும் துயரமாக உள்ளது. என்ன இருந்தாலும் சித்தார்த்தாவின் மரணத்தை ஏற்றுக் கொள்ள மனசு மறுக்கிறது என்பது உண்மைதான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications