"உட்காருடா"... என்று சொன்ன பெரிய கருப்பன்... சட்டசபையை விட்டு கோபத்தோடு வெளிநடப்பு செய்த அதிமுக
அமைச்சர் பெரியகருப்பன் மரியாதை குறைவாக பேசுகிறார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அமைச்சர் பெரிய கருப்பனைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: உட்காருடா என்று சட்டசபையில் பெரியகருப்பன் மரியாதைக்குறைவாக பேசியதாக அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் அதிகார வரம்பிற்குப் உட்பட்டுதான் செயல்படுகிறார் என்றும், அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் துணைவேந்தர்களை நியமிக்கிறார் என்றும் எதிர்கட்சித்துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக சட்டசபையில் தெரிவித்துள்ளது
Recommended Video

பல்கலைக்கழக துணைவேந்தர்கள்
தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், திறந்தநிலை பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியக் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகிய மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

குஜராத், தெலுங்கானா
குஜராத் பல்கலைக்கழக சட்டம் மற்றும் தெலுங்கானா பல்கலைக்கழக சட்டத்தில், அம்மாநிலங்களின் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் அந்த மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடகாவில் அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் துணைவேந்தர் நியமனம் நடைபெற்று வருவதாகவும், அதேபோல் தமிழ்நாட்டிலும் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையில் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள அரசு முடிவு செய்து அதற்கான சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்வதாக சட்டசபையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்
ஏற்கனவே ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்து மாநில பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தரை நியமிக்க வழிவகை செய்யும் சட்ட திருத்தத்திற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யார் யார் ஆதரவு
அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்ய மசோதாவுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில், அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

பாஜக எதிர்ப்பு
இந்த சட்டதிருத்த மசோதாவிற்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதா மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பதால் பாஜக எதிர்க்கிறது என்றும் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும்போது அரசியல் உள்நோக்கம் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அதிமுக எதிர்ப்பு வெளிநடப்பு
பல்கலைக்கழக துணைவேந்தர் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக சட்டசபையில் தெரிவித்தது. இந்த சட்ட மசோதா ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்று அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டினார். துணைவேந்தர் மசோதா மீதான விவாதம் நடைபெறும் நிலையில் சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் அதிகார வரம்பு
வெளிநடப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், அதிமுக உறுப்பினரை அமைச்சர் பெரிய கருப்பன் மரியாதைக் குறைவாகப் பேசியதாகவும் அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாகவும் கூறினார். ஆளுநர் அதிகார வரம்பிற்குப் உட்பட்டுதான் செயல்படுகிறார் என்றும், அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் துணைவேந்தர்களை நியமிக்கிறார் என்றும் எதிர்கட்சித்துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

பெரியகருப்பன் மரியாதை குறைவான பேச்சு
வெளிநடப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம்,
சட்டசபை நடவடிக்கையின்போது அ.தி.மு.க சார்பில், உறுப்பினர் கோவிந்தசாமி பேச முற்பட்டபோது, அமைச்சர் பெரியகருப்பன் "உட்காருடா" என்ற வார்த்தையை கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் பேசிய காரணத்தால், அ.தி.மு.க சார்பில் அமைச்சர் பெரியகருப்பனைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார்.
பல்வேறு நிலைகளில் பல்வேறு கருத்துகளாக துணைவேந்தர்கள் நியமன சட்ட மசோதா குறித்து பேசப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை யாரும், சட்டமுன்வடிவைக் கொண்டு வந்து நிறைவேற்றவில்லை என்பதை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு திமுக இரட்டை வேடம் போடுவதைத்தான் இது காட்டுகிறது.

ஆளுநர் அதிகார வரம்பு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநருக்கு என்று ஒரு தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரத்திற்கு உட்பட்டுதான் யார் ஆளுநராக இருந்தாலும் செயல்பட முடியும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் செயல்பட முடியாது என்று கூறினார். ஆளுநர் அதிகார வரம்பிற்குப் உட்பட்டுதான் செயல்படுகிறார் என்றும், அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் துணைவேந்தர்களை நியமிக்கிறார் என்றும் எதிர்கட்சித்துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications