ரஜினி எப்போதும் சூப்பர் ஸ்டார்தான்.. அரசியல் தலைவர் இல்லை.. விக்கிரமராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி எப்போதும் சூப்பர்ஸ்டார்தான், அவர் அரசியல் தலைவர் இல்லை என தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்க போவதில்லை என அறிவித்துள்ளதை பெரும்பாலானவர்கள் வரவேற்றுள்ளார்கள். அது போல் விக்கிரமராஜாவும் உளமார வரவேற்றுள்ளார்.

சென்னை வானகரம் அருகே தனியார் மண்டபத்தில் வியாபாரிகள் சங்க தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் இணைந்த சங்கத்தின் 15 ஆம் ஆண்டு விழாவில் பல்வேறு விதமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

 கொரோனா கட்டுப்பாடு

கொரோனா கட்டுப்பாடு

2021 ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை கொரோனா கட்டுப்பாட்டு அறிவிப்பு வந்துள்ளது. எனவே வரக் கூடிய நாட்கள் பண்டிகை காலங்கள் என்பதால் வியாபாரிகளின் கடைகள் அடைக்கப்படும் நேரத்தை தளர்வு செய்யப்பட வேண்டும்.

10 மாதம்

10 மாதம்

கொரானோ காலங்களில் வியாபாரிகள் தங்களுடைய வாழ்வாதாரம் இழப்பு ஏற்பட்டு கடந்த 10 மாதம் காலமாக கடுமையான சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளானர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழியாக உள்ளது. ஆகவே தை மாதம் வியாபாரத்திற்கு அரசு எந்த இடையூறும் செய்யாமல் வியபாரிகளை பாதுகாக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகர் பேரவை வலியுறுத்துகிறது.

10 லட்சம் ரூபாய்

10 லட்சம் ரூபாய்

கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்ட மரணமடைந்த வியாபாரிகளின் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் விக்கிரமராஜா. அவரிடம் ரஜினியின் அரசியல் முழுக்கு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அரசியல் தலைவர்

அரசியல் தலைவர்

அப்போது அவர் கூறுகையில் ரஜினி மக்கள் மத்தியிலே சூப்பர் ஸ்டாராக வாழ்ந்தவர். அவரை யாரும் அரசியல் தலைவராக பார்க்கவில்லை. ஆகவே இந்த வயதிற்குப் பிறகே அவர் உடலைப் பாதுகாப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்பதை அறிவித்திருக்கிறார். அதனை தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு உள்ளபூர்வமாக வரவேற்கிறது.

விக்கிரமராஜா

விக்கிரமராஜா

மருத்துவர்கள் கூறியது போல் அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டும் எங்களை போன்ற ரசிகர்களும் சொல்லுகிறோம், அவருக்கு அரசியல் வேண்டாம் என்பதுதான் எங்கள் கோட்பாடு. அரசியல் நோக்கம் குறித்து கூறிய விக்கிரமராஜா தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+