விஜய் கரூர் வந்து இருக்கனும்.. ரூ.20 லட்சம் வேண்டாம்.. திருப்பி அனுப்பிய கணவரை இழந்த பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி, விஜய் அளித்த 20 லட்சம் பணத்தை திருப்பி அளித்துள்ளார். விஜய் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்பதால் பணத்தை திருப்பி அளித்ததாகவும், பணம் வேண்டாம் ஆறுதல் மட்டுமே வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மாதம் 27 ஆம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தையடுத்து விஜய் தனது சனிக்கிழமை பிரசார பயணத்தை ஒத்திவைத்தார்.

victim-returns-20-lakh-given-by-tvk-chief-vijay-alleges-he-failed-to-visit-karur-as-promised

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்ததுடன் தவெக சார்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.20 லட்சம் நிதி உதவி அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அப்போது விஜய் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் வந்து சந்திப்பேன் என்று கூறியிருந்தார்.

எனினும் விஜய், பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக கரூரில் உள்ள ஏதாவது ஒரு திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்த போது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் தெரிவிக்க நடிகர் விஜய் முடிவு செய்தார். இதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேற்று கரூரில் இருந்து ஆம்னி பேருந்துகளில் அழைத்து வந்தனர்.

மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள 'போர் பாயின்ட்ஸ் பை ஷேரட்டன்' என்ற நட்சத்திர ஓட்டலில் விஜய் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட 37 குடும்பத்தினரில் 33 குடும்பத்தினர் வந்த நிலையில், 4 குடும்பத்தினர் மட்டும் வீட்டில் பூஜை வைத்திருப்பதாக கூறி வரவில்லை என்று கூறியதாக கூறப்பட்டது. விஜய் இன்று காலை 9 மணியளவில் சொகுசு விடுதிக்கு சென்றார். பாதிகப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது விஜய் கண்கலங்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் சுமார் 15 முதல் 25 நிமிடங்கள் வரை பேசினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் எனக்கூறியதோடு,மீண்டும் நான் கரூர் வருவேன். அப்போது உங்கள் வீட்டில் வந்து சந்திப்பேன். உங்களுக்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன் என்று பேசியதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறிய பின்பு, குடும்ப தலைவர்களின் பெயரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள இன்சுரன்ஸ் தொகைக்கான சான்றிதழை விஜய் வழங்கினார்.பங்கேற்க முடியாதவர்களின் குடும்பத்தினருக்கும், இந்த காப்பீட்டு தொகையை வழங்க த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 37 குடும்பத்தினரின் பெயரில் ரூ.1 கோடியே 85 லட்சம் காப்பீட்டு தொகையை விஜய் வழங்கினார்.

பாதிகப்பட்டவர்களுடனான சந்திப்பு சுமார் 9 மணி நேரம் நடைபெற்றது. இதையடுத்து, கரூருக்கு அனைவருகும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி தனக்கு விஜய் அளித்த 20 லட்சம் பணத்தை திருப்பி அளித்துள்ளார்.

விஜய் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்பதால் பணத்தை திருப்பி அளித்ததாகவும், பணம் வேண்டாம் ஆறுதல் மட்டுமே வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தனக்கு தெரியாமல் தனது உறவினர்களை தவெக நிர்வாகிகள் அழைத்து சென்று இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சங்கவி என்ற பெண் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+