மாட்டை பிடிக்கிறது யாருப்பா.. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.. சட்டென நடந்ததை பாருங்க
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பிடித்தார். இதற்கு மாட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.
அப்போது மாட்டின் உரிமையாளர்களிடம் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகி உள்ளது.

அண்மையில் சென்னை அரும்பாக்கத்தில் தன் அம்மா உடன் நடந்து சென்ற சிறுமியை மாடு ஒன்று முட்டி தாக்கியது. ஒருமுறை அல்லது இருமுறை அல்ல..பலமுறை ஒரு வெறிபிடித்த மிருகம் போல் முட்டி தள்ளியது. அதன் அருகில் யாரையும் மாடு நெருங்கக்கூட விடவில்லை.
இந்த காட்சி காண்போரை கலங்க வைத்தது. சென்னை அரும்பாக்கம் ஆலைமேட்டை சேர்ந்த ஹர்ஷன் பானு என்ற பெண் தனது இரண்டு மகள்களையும் பள்ளி முடித்து வழக்கம் போல வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மாடுகள் கூட்டமாக சென்றன.
அப்போது அதில் ஒரு மாடு திடீரென 9 வயது சிறுமி ஆயிஷாவை வெறிபிடித்தது போல் கொம்பால் குத்தி தூக்கி வீசியது. பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் குத்தியது. அருகில் இருந்தோர் கூச்சலிட்டு மாடு மீது கற்களை வீசி காப்பாற்ற முயற்சித்தார்கள். ஆனால் அதை பொருட்படுத்தாத மாடு சிறுமியை தாக்கியது. ஒரு கட்டத்தில் அக்கம் பக்கத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து மாட்டினை பிரம்பால் மாட்டை அடித்து துரத்திவிட்டார்கள். அதன்பிறகே சிறுமியை மீட்க முடிந்தது. அந்த சிறுமி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாட்டினை தெருவில் சுற்றவிடுவதால் தான் இதுபோன்ற மோசமான விபத்துக்கள் நடக்கிறது என்றும் சென்னையில் மாடுகளை சாலையில் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து குறிப்பிட்ட மாட்டினை பிடித்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் அதற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பகுதியில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிவது வாடிக்கை. அந்த பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் தலைமையில் அதிகாரிகள் இன்று காலை வந்தனர். அவர்கள் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க முயற்சித்த போது, அதற்கு மாட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை பார்த்தசாரதி கோயிலை சுற்றி உள்ள மாடுகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதகிருஷ்ணன் நேரடியாக பிடித்து வருகிறார். மாட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு @RAKRI1 @chennaicorp #chennai #cow pic.twitter.com/VwYdlvBnr9
— velmurugan (@velmurugantheni) August 12, 2023
அப்போது மாட்டின் உரிமையாளர்களிடம் விதிகளை கூறி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் அளித்தார். ஆனால் அவர்கள் அந்த விளக்கத்தை ஏற்கமறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று கூடத்தான் ஒரு லாரி பலர் மீது ஏறியது. அதில் ஐந்து ஆறு பேர் செத்தார்கள். உடனே லாரிகளை தடை செய்துவிடுவீர்களா என்று கேட்டனர்.
அப்போது மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறும் போது, மாட்டிற்கு என்று உரிமை உள்ளது. மாட்டிற்கு உணவு அளிக்காமல் எங்காவது மேயவிட்டு அதற்கு நோய் வந்தால் என்ன செய்வீர்கள், இது தவறு என்று எடுத்துரைத்தார். கொரோனா வந்ததற்கு என்ன காரணம் என்று விவரித்த ராதாகிருஷ்ணன் விலங்குகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications