அம்மாடி.. அரபிக் கடலுக்கு வந்த ஆவேசம்.. மும்பை தாஜ் ஹோட்டலிலிருந்து எடுக்கப்பட்ட பரபர வீடியோ!
சென்னை: மும்பையில் உள்ள ஜூஹா கடற்கரை புயலால் எத்தனை ஆக்ரோஷமாக இருக்கிறது என்பது குறித்து மும்பை தாஜ் ஹோட்டலில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் இன்று இரவு குஜராத் அருகே கரையை கடக்க தொடங்கியது. இந்த புயல் கர்நாடகா, கோவா, கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக குஜராத் அருகே நிலை கொண்டிருந்தது.

இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்தது. ஜூஹா கடற்கரை கொந்தளிப்புடன் காணப்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த காட்சிகளை யாரோ ஒருவர் தாஜ் ஹோட்டலில் இருந்து படம் பிடித்துள்ளார்.
இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. புயல் கரையை கடப்பதால் குஜராத்தில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இவை செவ்வாய்க்கிழமை வரை மூடப்படுகின்றன. இந்த புயல் கரையை கடக்க 3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications