வயலில் நாற்று நடும் போது.. "அடி ஆசை மச்சான்" பாடலுக்கு நடனமாடும் விவசாயிகள்- வைரல் வீடியோ
சென்னை: வயலில் நாற்று நடும் போது டிராக்டரில் போடப்பட்ட ஆச மச்சான் பாடலுக்கு விவசாயிகள் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
பொதுவாக எந்த வேலை செய்தாலும் அலுப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடி கொண்டோ பாட்டு கேட்டு கொண்டோ வேலை பார்ப்பது வழக்கம். இது ரயில், பஸ் பயணம், ஷேர் ஆட்டோ, டவுன் பஸ் பயணம் என எதுவாக இருந்தாலும் இப்படித்தான் நாம் செயல்படுவோம்.

இது அலுப்பு தெரியாததோடு டைம் பாஸ் ஆகும். அது போல் டிரைவர்கள் பாட்டுக் கேட்டு கொண்டு வாகனம் ஓட்டினால் தூக்கம் வராது என்பதால் அவர்கள் அவ்வாறு பாட்டு கேட்டுக் கொண்டு வாகனம் ஓட்டுகிறார்கள்.
அது போல் வயல் வெளியில் பணியாற்றி வரும் விவசாயிகள் பாட்டுக்கு நடனம் ஆடி கொண்டே பணியாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. எந்த ஊர் என தெரியவில்லை. ஒரு வயலில் விவசாயிகள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

அப்போது டிராக்டரில் கும்மிப்பாட்டு என்ற திரைப்படத்திலிருந்து அடி ஆசை மச்சான் வாங்கித் தந்த மல்லிகைப்பூ என்ற பாடல் ஒலிக்கப்படுகிறது. உடன் அங்கிருந்த பெண்களும் ஒரு ஆணும் நடனம் ஆடி கொண்டே பணியை தொடர்கிறார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications