பள்ளிக்கரணை ஏரியில் பட்டப்பகலில் செய்வதை பாருங்க.. ஓஎம்ஆர் சாலையில் கழிவு நீர் லாரியால் பரபரப்பு
சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் பட்டப்பகலில் மனித கழிவு நீரை ஏற்றிவந்த கழிவு நீர் லாரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் விட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில கழிவு நீர் லாரிகள் கண்ட இடங்களில் கழிவுகளை கொட்டக்கூடாது என்ற விதி உள்ளது. பாதுகாப்பான முறையில் அதை வெளியேற்ற வேண்டும். அதற்கு என்று சென்னையில் தனியாக மாநகராட்சி இடங்களை உருவாக்கி உள்ளது. ஆனால் சில கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் , கழிவுநீரை லாரியில் ஏற்றி, அதை மழைநீர் வடிகால், ஏரி, குளங்களில் கொட்டுகிறார்கள். இதனால், நிலத்தடி நீர் மாசடைவதுடன் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க, சென்னையில் உள்ள 13 மண்டலங்களில் ஆறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 16 உந்து நிலையங்களில் லாரி கழிவுநீரை கொட்ட வசதியாக செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகரை பொறுத்தவரை கழிவுநீர்களை கொட்டுவதற்கு சோழிங்கநல்லுார், திருவொற்றியூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, கொடுங்கையூர், பெருங்குடி, நெசப்பாக்கம், கோட்டூர்புரம், தாடண்டன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 22 கழிவுநீர் சுத்திகரிப்பு, உந்து நிலையங்கள், 92 கோடி லிட்டர் கொள்ளளவுடன் இருக்கின்றன.. இங்கு தினமும், 290 லாரிகள், 1,300 முதல் 1,400 நடைகள் வரை, கழிவுநீரை கொட்டுவதாக கடந்த ஆண்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு லாரி கழிவுநீரை கொட்ட சென்னை கழிவு நீர் வடிகால் வாரியம், 150 ரூபாய் வசூலிக்கிறது. இதற்கு ஒரு லாரிக்கு 2,000 ரூபாய் செலுத்தி, இரண்டு ஆண்டுக்கான உரிமம் பெற வேண்டும். உரிமம் பெற்ற லாரியை தான், மக்கள் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். பொதுமக்களிடம் கழிவுநீர் லாரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் உள்ளது. தற்போதைய நிலையில் 2 கி.மீ., தொலைவுக்கு 650 ரூபாயும், அதிகபட்சமாக 14 கி.மீ.,க்கு 1,500 ரூபாயும் நிர்ணயம் செய்து கடந்த ஆண்டு கழிவு நீர் வாரியம் உத்தரவிட்டது. ஆனால் நடைமுறையில் இவை பின்பற்றப்படுவது இல்லை என்கிறார்கள் பொதுமக்கள்.. 1500 முதல் 2500 வரை வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
இது ஒருபுறம் எனில், கழிவு நீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொறுத்த வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால் அதனை சரியாக பின்பற்றாத சிலர், ஆறு, குளம் மற்றும் கால்வாய்களில் திருட்டுத்தனமாக கழிவு நீர்களை வெளியேற்றுவதாக புகார் உள்ளது.. அதை நிரூபிக்கும் வகையில் சென்னை ஓஎம்ஆர் சாலையில் பட்டப்பகலில் மனித கழிவு நீர்களை ஏற்றிவந்த கழிவுநீர் லாரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் விட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிக்கரணை ஏரியில் யாரையும் கழிவுநீரை கொட்ட அனுமதிக்கக்கூடாது என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications