ஜெயம் ரவி ரொம்ப பொசசிவ்.. அம்மா கிட்ட பேசினா கூட.. ஆர்த்தி சொன்ன அந்த விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜெயம் ரவி, ஆர்த்தி தங்கள் காதல் குறித்து பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ ஒன்றில், காதலிக்கும்போது ரவி கூறியதாக ஆர்த்தி சொன்ன விஷயம் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவி - ஆர்த்தி தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்துப் பெறும் முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், ஜெயம் ரவி திருமண வாழ்வில் இருந்து விலகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

jayam ravi aarthi divorce

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன், நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி." எனத் தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி வெளியிட்டுள்ள இந்த அறிக்கை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி பேசும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

நான் நிஜமாகவே ரொம்ப பிளெஸ்டு..: இந்த மாதிரி ஒரு கணவர் என் வாழ்க்கையில் கிடைச்சதற்கு நான் ரொம்ப ஆசிர்வதிக்கப்படவளாக உணருகிறேன். அவர் எல்லா பெண்களையுமே ரொம்பவும் மரியாதையாக நடத்துவார். அவருடைய அம்மா, அக்கா, தோழிகள், அவருடைய ஹிரோயின்ஸ்னு எல்லோரையும் ரொம்ப மரியாதையாக நடத்துவார். அவங்களை பார்த்துக்கிறதுலயே நீங்கள் புரிந்துகொள்ளலாம் எனக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பார் என்று. வெளியே எப்படி நடந்து கொள்கிறாரோ அதைவிட 100 மடங்கு அதிகமாகத்தான் வீட்டில் நடந்து கொள்வார்.

அந்த விதத்தில் நான் எப்பவுமே ரொம்ப பிளெஸ்டு.. நன்றி என்று கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் ஜெயம் ரவி மை பிரின்சஸ்தான் எப்போதுமே என்று கூறுகிறார். அப்போது பேசும் ஆர்த்தி, லவ் பண்ணும்போது ரவி ஒரே விஷயம் தான் சொன்னாரு. நான் உன்னை மேரேஜ் பண்ணிட்டு ராணி மாதிரி வெச்சுக்குறேன்னு சொன்னாரு. அதை இப்போது வரை பண்ணிட்டுருக்காரு. என்று சொல்லும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஓவர் பொசசிவ் ரவி..: ஆர்த்தியை சுட்டிக்காட்டி அவங்க இல்லை என்றால் நான் இல்லை என்று ரவி கூறும் வீடியோவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரவி 100 சதவீதம் பெட்டரான கணவர். அம்மாகிட்ட பேசினா கூட பொசசிவாக ஃபீல் பண்ணுவாரு. இதுக்கு மேல நான் என்ன சொல்றது என்று ஆர்த்தி கூறுகிறார். அப்போது ரவி, நீ வேற யாருகிட்ட பேசினாலும் நான் பொசசிவ் ஆக மாட்டேன். என்கிட்ட சொல்ல முடியாத விஷயங்களைககூட அவங்க அம்மாகிட்ட தான் சொல்லுவாங்க.

அப்போ நான் பொசசிவாகதான் ஃபீல் பண்ணுவேன் என்கிறார். அம்மாகிட்ட மட்டும் சிரித்துப் பேசுற என்கிட்ட இப்படி பேசமாட்டீங்கிறியேனு எல்லாம் சொல்லுவாரு. அந்த அளவுக்கு அவருக்கு பாசம். இதுக்கு மேல நான் என்ன சொல்றது என்கிற கியூட்டான வீடியோவும் வைரலாகி வருகிறது.

எங்க லைஃப்ல நிறைய யூடர்ன்..: சினிமாவில் நடிக்கும்போது வெளியில் போக முடியாது அதனால கார்லயே தான் எங்க டேட்டிங் நடக்கும். கார்லயே சுத்தி சுத்தி வருவோம். அதனால, எங்க லைஃப்ல நிறைய யூடர்ன் போட்டிருக்கோம்.

சர்ப்ரைஸ் ஆ பூ கொடுப்பேன்..: ஃபாரின்ல எல்லா பகுதிகளிலும் பூ விற்பனை செய்வாங்க. காதலின் அடையாளம் பூ. நாங்கள் வெளியில் செல்லும்போது ஆர்த்திக்கு தெரியாமல் பூ வாங்கிவிட்டு வந்து, அங்க பாரு இங்க பாரு.. என்று ஏமாற்றி பூ கொடுப்பேன். அது அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஜெயம் ரவி கூறும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த கியூட்டான ஜோடி மீண்டும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி இதுவரை தனது புரொஃபைல் ஐடியில் வைத்துள்ள ஆர்த்தி ரவி என்ற பெயரை மாற்றவில்லை.

அதேபோல, மேரீடு வித் ஜெயம் ரவி என்பதையும் இதுவரை மாற்றவும் இல்லை. ஆர்த்தியின் தரப்பில் இருந்து விவாகரத்து முடிவு குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+