தேசப்பற்றுள்ளவர் எனில் "இது" குறித்தல்லவா பேசியிருப்பார்.. கர்னல் தியாகராஜனை விமர்சித்த வன்னி அரசு
சென்னை: நேற்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றிருந்த 'கர்னல் தியாகராஜன்' திடீரென விவாதத்திலிருந்து விலகிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் திமுக சார்பில் விவாதத்தில் பங்கேற்றிருந்த ராஜீவ் காந்தி தன்னை பேச விடாமல் செய்ததாக தியாகராஜன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், தியாகராஜன் குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

சிலிண்டர் வெடிப்பு
கடந்த 23ம் தேதி கோவையில் நிகழ்ந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது திட்டமிட்ட சதி தாக்குதல், தீவிரவாத சதிச் செயல் என பாஜகவினர் குற்றம்சாட்டினர். ஆனால் திமுக இதனை மறுத்தது. இந்நிலையில் நேற்று கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு காவல்துறையின் செயலை பாராட்டினார். ஆனால், இந்த சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏ வசம் ஒப்படைத்தது கால தாமதமானது என்றும் அவர் கூறியிருந்தார்.

குற்றச்சாட்டு
இந்நிலையில், இது குறித்து தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் விவாதங்களை நடத்தின. நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றிருந்த கர்னல் தியாகராஜன் ஆளுநரின் கேள்வி சரியானது என்று கூறினார். ஆனால் இதற்கு திமுக தரப்பில் விவாதத்தில் பங்கேற்றிருந்த ராஜீவ் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து விவாத களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. பின்னர் பேசிய தியாகராஜன், "சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தவரின் வீட்டில் வெடி பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இருந்துள்ளன" என்றும், "இதனை காவல்துறை தெரிவிக்காமல் மறைத்திருக்கிறது" என்று கூறினார்.

பயங்கர வெடி பொருட்கள்
அப்போது குறுக்கிட்டு பேசிய ராஜீவ் காந்தி, "இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் மிகவும் பயங்கரமானவை என்று கூறினால் அது பொதுமக்களை அச்சுறுத்துவதாக அமைந்துவிடும். எனவே காவல்துறையினர் இதனை சரியாக கையாண்டிருக்கிறார்கள். கைப்பற்றப்பட்டதையெல்லாம் வெளியில் கூறினால் அது தேச துரோகமாக அமைந்துவிடும்" என்று கூறியுள்ளார். உடனே தன்னை தேச துரோகியாக ஆக்கிவிட்டார்கள் என்று தியாகராஜன் கண்டனம் தெரிவிக்க ஸ்ரீராம் சேஷாத்திரியும் தியாகராஜனுக்கு ஆதரவாக கண்டனம் தெரிவித்தார்.

பாஜகவுக்கு வேலை
இது குறித்து விளக்கி பேசிய ராஜீவ் காந்தி, "தியாகராஜன் பாஜகவுக்கு வேலை பார்க்க வேண்டாம்" என்று கூறினார். இதனையடுத்து ஏற்பட்ட சலசலப்பையடுத்து தியாகராஜன் விவாதத்தின் பாதியிலிருந்து வெளியேறிவிட்டார். இது குறித்து தனது டிவிட்டரில், " விவாதத்தில் கருத்து என்பது சற்றும் இல்லாததால் உண்மையை எதிர்கொள்ள முடியாமல் மாண்பற்று பேசி தனி மனித தாக்குதலில் ஈடுபட்ட ராஜீவ் காந்தியை கண்டிக்க முடியாமல் நிகழ்ச்சியை வழிநடத்த இயலாத நெறியாளரை என்ன கூறுவது? இந்த தரமற்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்கு வருந்துகிறேன்" என்று கூறியிருந்தார்.

வன்னி அரசு விமர்சனம்
மேலும், "இது போன்ற நிகழ்ச்சிகளில் இனி பங்கு பெற போவது இல்லை. எனது மூத்த சகோதரர் ஸ்ரீராம் சேஷாத்திரி என்னுடன் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்ய முற்பட்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிழைப்பிற்காக கட்சி தாவும் தரமற்றவர்களுடன் இனி யாரும் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எனது நன்பர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று தியாகராஜன் கூறியிருந்தார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு விமர்சனம் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆதரவாளர்
"தேசப்பற்றுள்ள கர்னல் என்றால், இந்தியா முழுக்க குண்டு வைக்க RSS பயிற்சி கொடுத்தது என மும்பை நீதிமன்றத்தில் யஷ்வந்த் ஷிண்டே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது விவாதப்படுத்தி RSS அமைப்பை கண்டிப்பார்கள். உங்களைப்போன்ற RSS இயக்கத்தைச்சார்ந்த கர்னல் என்றால் கள்ளமவுனம் காப்பார்கள்" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே பல்வேறு விவாதங்களில் நடுநிலையாளர் எனக்கூறிக்கொண்டு பங்கேற்றிருந்த 'சுமந்த் ராமனை' வலதுசாரி என்று அடையாளப்படுத்தியதற்காக விவாதத்திலிருந்து சென்றுவிட்டார். தற்போது முன்னாள் கர்னல் ஒருவர் மீது பாஜக ஆதரவாளர் எனும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்!












Click it and Unblock the Notifications