வேளச்சேரி ரயில் நிலையம் முதல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை பல வருடங்களாக மாறாத காட்சிகள்
சென்னை: வேளச்சேரி ரயில் நிலையம் கடந்து மேம்பாலம் இறங்கினால் பள்ளிக்கரணையில் கைவேலி சந்திப்பு வரும். அந்த இடம் முதல் மேடவாக்கம் கூட்ரோடு வரை ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் குற்றம்சாட்டுகிறார்கள். கைவேலி சந்திப்பு முதல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு அங்கு, நடைபாதைகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள கடைகள் காரணம் என்றும், அந்த ஆக்கிரமிப்பை நிரந்தரமாக அகற்ற பள்ளிக்கரணை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்றால் அது வேளச்சேரியை சுற்றியுள்ள பகுதிகள் தான் தரமணி தொடங்கி சோழிங்கநல்லூர் தாண்டி நாவலூர் வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைந்துள்ளன. அந்த பகுதிக்கு கிண்டி வழியாக செல்ல வேண்டும் என்றால், வேளச்சேரி, மேடவாக்கம் சாலையில் செல்ல வேண்டும்.

வேளச்சேரி ரயில் நிலையத்தைதாண்டி, மேம்பாலம் கடந்து பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையை நோக்கி சென்றால், கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திப்பீர்கள்.. காரணம் அங்கு நடைபாதைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் முக்கிய காரணம் ஆகும். இந்த கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் பெயருக்கு அகற்றாமல் நிரந்தரமாக அங்கு ஆக்கிரமிப்புகள் ஏற்படாத அளவிற்கு அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஏனெனில் இந்த சாலை தான் வேளச்சேரி, சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், துரைப்பாக்கத்தை இணைக்கும் முக்கியமான இடம் ஆகும். இங்கு கடைகளுக்கு செல்வோர், வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் பீக் அவர்ஸ் என்று அழைக்கப்படும் 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.
எனவே கைவேலி முதல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை தாண்டி, மேடவாக்கம் கூட்ரோடு சந்திப்பு வரை சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால் வாகனங்கள் காலையிலும், மாலையிலும் செல்ல முடியாமல் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.
இருசக்கர வாகன ஓட்டிகள், காரில் செல்வோர் இந்த சாலையை கடக்க நீண்ட நேரம் ஆகிறது. இந்த சாலையில் உள்ள ஆக்கிரிமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஐடி சாலையான இந்த பகுதியில் உள்ள பிரச்சனைகளில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Huge traffic due to illegal parkings and encroachments near Kaiveli (Velachery-Medavakkam road) @chennai_Highway @chennaicorp @mkstalin
— Pallikaranai Updates (@pallikaranaii) August 26, 2025
Any specific reason why no officials are minding this.? pic.twitter.com/vtOO2vz0hI
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கத்தில் இரவில் நீண்ட நேரம் மின்தடை.. பொதுமக்கள் ஆவேசம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்











Click it and Unblock the Notifications