விஜய் ஆட்சி அமைந்தால்.. தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி?
சென்னை: தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமையும் பட்சத்தில், மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி சீட்டுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில், அதனை தமிழ்நாட்டிலும் நடைமுறைக்கு கொண்டு வருவார்கள் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12 மணி நிலவரப்படி தவெக 105 இடங்களிலும், அதிமுக 68 இடங்களிலும், திமுக 61 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. சென்னை, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் தவெக மிகப்பெரிய ஆதிக்கத்தை செய்திருக்கிறது. இது இரு திராவிட கட்சிகளுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதனால் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் 5 சுற்று வாக்குகள் மட்டுமே முடிவடைந்திருப்பதால், இன்னும் சுமார் 8 முதல் 10 சுற்று வாக்குகள் மீதமிருக்கிறது. இதனால் கடைசி நேரத்தில் கூட வெற்றி, தோல்வி மாறலாம் என்று பார்க்கப்படுகிறது.
ஆனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளிலும் தவெக அதிகளவிலான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. இதனால் விஜய் தலைமையில் ஆட்சி அமையும் என்றே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தவெக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கான தடை நீக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா லாட்டரி சீட்டு தொழில் செய்தவர். இவரின் மாமனார் லாட்டரி மார்ட்டின் இந்தியாவின் லாட்டரி கிங் என்று அழைக்கப்படுபவர். இதன் மூலமாகவே லோக்சபா தேர்தலின் போது பல்வேறு கட்சிகளுக்கும் லாட்டரி மார்ட்டின் மிகப்பெரிய தொகையை நன்கொடையாக வழங்கி இருந்தார்.
இதனால் தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தால், லாட்டரி சீட்டு விற்பனை மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2003ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் கேரளாவில் லாட்டரி சீட்டுக்கு எந்தவித தடையும் கிடையாது.
கேரளா மற்றும் வடமாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பக்தர்கள் பலரும், மீண்டும் சொந்த ஊர் வரும் போது லாட்டரி சீட்டுடன் தான் கண்டிப்பாக வருவார்கள். இதனால் தமிழ்நாட்டிலும் ஆதவ் அர்ஜுனா மூலமாக அந்த நடைமுறை மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications