திருச்சியில் விஜய் பேச மட்டும் அனுமதி.. ரோடு ஷோவுக்கு நோ சொன்ன காவல்துறை.. கட்டுப்பாட்டுகள் என்னென்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் 13 ஆம் தேதியில் இருந்து மக்கள் சந்திப்பு பயணத்தை துவங்க உள்ளார். இதில் முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் திருச்சியில் தொடங்க உள்ளார். இதற்கு அனுமதி கேட்டு திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் அளித்திருந்த நிலையில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் 13 ஆம் தேதி திருச்சி மரக்கடையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் தகிக்க தொடங்கி விட்டது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளர். கட்சியின் இரண்டு மாநில மாநாடு முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்.

vijay-allowed-to-speak-in-trichy-but-no-permission-for-roadshow-police-restrictions-listed

முதலில் திருச்சியில் இருந்து வரும் 13 ஆம் விஜய் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளார். இதற்காக தவெக தரப்பில் போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. மக்கள் கூடும் இடம் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதற்கு பிறகு மீண்டும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மீண்டும் திருச்சி காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் திருச்சியில் விஜய்யின் பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. வரும் 13 ஆம் தேதி திருச்சி மரக்கடையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது விஜய் ரோடு ஷோ செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+