பாடல் யாருக்கு சொந்தம்? இளையராஜா செய்வது சரியா? விடாமல் வாதாடிய விஜய் ஆண்டனி
சென்னை: இளையராஜா தனது பாடல்களுக்கான உரிமையைக் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது குறித்து விஜய் ஆண்டனி கருத்து தெரிவித்துள்ளார்.
இளையராஜா தனது பாடல்களைத் திரைப்படங்களில் முன் அனுமதி பெறாமல் பயன்படுத்துவது தொடர்பாக 'மஞ்சும்மல் பாய்ஸ்' உள்ளிட்ட படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'கூலி' படத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்தப் படத்திற்கான டைட்டில் அறிவிப்புக்கான டீசரில் 'வா வா பக்கம் வா' பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.
அது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. அதற்கு நடிகர் ரஜினிகாந்த், "அது தயாரிப்பாளருக்கும் இசையமைப்பாளருக்குமான பிரச்சினை" என்று பட்டும் படாமல் பேசி இருந்தார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி அது குறித்து சில விளக்கங்களை அளித்துள்ளார். " "என்னுடைய 'ரோமியோ' திரைப்படம் காப்பி இல்லை. பாதிப்பிலிருந்து உருவானது. ஆகவே அதை அப்படி சொல்லக் கூடாது" என்று கூறியுள்ளார்.
அப்போது கடந்த மாதம் விஜய் ஆண்டனியின் 'ரோமியோ' திரைப்படம் வெளியானபோது, அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்திருந்தார் ப்ளூ சட்டை மாறன்.
விஜய் ஆண்டனியின் இந்தப் படம் காப்பி என்றும் கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாக விஜய் ஆண்டனி, 'ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிவிடாதீர்கள்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி அது குறித்து சில விளக்கங்களை அளித்துள்ளார். " "என்னுடைய 'ரோமியோ' திரைப்படம் காப்பி இல்லை. பாதிப்பிலிருந்து உருவானது. ஆகவே அதை அப்படிச் சொல்லக் கூடாது" என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய விஜய் ஆண்டனி, "நான் நடிக்க வந்தது முதல் இசையமைக்க முடியவில்லை. இந்த வருடத்தில் இறுதியிலிருந்து மற்ற நடிகர்களின் படங்களுக்கும் மீண்டும் இசையமைக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளேன்.
இளையராஜா பாடலை எங்கள் விஜய் மில்டன் படத்தில் பயன்படுத்தி இருக்கிறோம். அதற்கான அனுமதியைத் தயாரிப்பாளர் இளையராஜாவை சந்தித்துப் பெற இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அனுமதி பெறுவதற்கான அனைத்து வேலைகளும் நடந்து வருகிறது.
இளையராஜா சொந்தமாகவே ஆடியோ நிறுவனம் வைத்திருந்தார். 'எக்கோ' நிறுவனம் அவருடையதுதான் என்று நினைக்கிறேன். அவருடைய நண்பரின் பெயரில் அவர் நடத்தி வந்தார் என நினைக்கிறேன். அது சரியாகத் தெரியவில்லை.
'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தில் அவரது பாடலை பயன்படுத்தியது தொடர்பாக அனுமதி கேட்டிருக்கலாம். படம் வெற்றி பெற பிறகு படக்குழு கமல்ஹாசனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்கள். அதைப்போல இளையராஜாவையும் அந்தக் குழு சந்தித்திருக்கலாம்.
அதை ஏன் அவர்கள் செய்யவில்லை என்று தெரியவில்லை. முறையாகச் சந்தித்து அனுமதி பெற்றிருந்தால் பிரச்சினை இருக்காது. இளையராஜா அவரது உரிமையைக் கேட்கிறார். அது குறித்து நான் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது.
அங்கே என்ன நடக்கிறது என்பது எனக்கு முழுமையாகத் தெரியாது. எனக்குக் கிடைத்த தகவலின் படி இளையராஜா பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் முடிந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆகவே இதை பெரிதுபடுத்த வேண்டாம்.
எனது படங்களில் வரும் பாடல்களுக்கான உரிமை என்னிடம் தான் உள்ளது. நான் தான் அதன் தயாரிப்பாளர். இசையமைப்பாளரும் நான் தான். அதைப்போல இளையராஜா தனக்கு உரிமை உள்ள பாடல்களுக்குத்தான் காபிரைட் கேட்கிறார்.

எனக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் அவருடைய கருத்தைச் சொன்னார். நான் எனது கருத்தைச் சொல்லி இருந்தேன். அவ்வளவுதான். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருடைய வேலையை அவர் செய்கிறார்.
அவர் அப்படிப் பேசினால்தான் நீங்கள் அந்த யூடியூப் சேனலை பார்ப்பீர்கள். ஆகவே அவர் பேசுகிறார். அதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை" என்றார்.
விஜய் ஆண்டனியிடம் இடைவிடாமல் இளையராஜா பற்றிய கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதற்கு அவர், "தலைப்புச் செய்திக்கு ஏதாவது நான் சொல்ல வேண்டுமா? அவரது உரிமையை அவர் கேட்கிறார். நான் எந்தப் பக்கத்தையும் ஆதரிக்கவில்லை. என் பாடல்களின் உரிமையைப் பற்றி மட்டும்தான் பேச முடியும்" என்றார்
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications