கெட்ட கோபம் வந்துரும்.. எனக்கில்லை தொண்டர்களுக்கு! விஜயிடம் செங்கோட்டையன் சொன்ன மேட்டர்! என்னவாம்?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நாளை ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தீவிரமாக செய்து வருகிறார். இந்த நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது விஜய் உரையாற்ற வேண்டும் விஜய்க்கு செங்கோட்டையன் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
18ஆம் தேதியான நாளை ஈரோடு மாவட்டம். மூங்கில்பாளையத்தில் காலை 11.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் 'ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன். அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு தனது பகுதியில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஈரோடு மக்கள் சந்திப்பு
இது மட்டும் அல்லாமல் காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை என பல்வேறு துறைகளிடம் அனுமதி பெற்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். விஜய் முதல் முறையாக வருவதால் அதிமுகவுக்கு திரட்டுவது போல முதன்முறையாக 'ஸ்வீட் பாக்ஸ்' கொடுத்து மக்களை திரட்டி வர திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் விஜய்க்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை செங்கோட்டையன் வழங்கியதாக சொல்லப்படுகிறது.
விஜய் உரை
அதாவது இதுவரை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 10 நிமிடம் முதல் 15 நிமிடங்கள் வரை மட்டுமே பேசி இருக்கிறார். இதனால் பல மணி நேரங்கள் காத்திருந்த தொண்டர்கள் கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ஈரோட்டில் அதுபோன்று நடக்க கூடாது எனவும், குறைந்தது அரை மணி நேரமாவது விஜய் பேச வேண்டும் என கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
விஜய் பேச்சு
இதுதொடர்பாக பேசிய தவெக நிர்வாகிகள்." 2024 பிப்ரவரியில் கட்சியை தொடங்கிய விஜய், அதே ஆண்டு அக்டோபரில் விக்கிரவாண்டி அருகே நடந்த முதல் மாநாட்டில் 46 நிமிடங்கள் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மதுரையில் நடந்த மாநாட்டில் 35 நிமிடங்கள் பேசினார். ஆனால் அதன்பின் தொடங்கிய பிரசார சுற்றுப்பயணங்களில், வாகனத்தில் இருந்தபடியே 10 நிமிடங்களுக்குள் உரையை முடித்து வந்தார்.
தமிழக வெற்றிக் கழகம்
கரூரில் நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, பொதுவெளி நிகழ்ச்சிகளில் விஜய் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற மக்கள் சந்திப்பிலும், சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்திலும் விஜய் குறுகிய நேரமே பேசினார். இதனால், பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் விஜயின் 10 நிமிட பேச்சைக் கேட்கவா வேகாத வெயிலில் காத்திருந்தோம் என புலம்புகின்றன.
செங்கோட்டையன்
மேலும், ஊடகங்களும் இதுகுறித்து விஜயை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு, கரூர் சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் நடைபெறும் முக்கியமான பொதுவெளி நிகழ்ச்சியான ஈரோடு மக்கள் சந்திப்பில், குறைந்தது 30 நிமிடங்களாவது விஜய் உரையாற்ற வேண்டும் என செங்கோட்டையனும், பிற மாநில நிர்வாகிகளும் ஆலோசனை வழங்கியுள்ளனர். தொண்டர்களை ஏமாற்றக் கூடாது என்பதே இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கம்" என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications