"யாருதுபா இது?".. நீலாங்கரை வாக்குச் சாவடியில் வாக்காளர் தவறவிட்ட செல்போனை எடுத்து கொடுத்தார் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க நீலாங்கரை வாக்குச் சாவடி மையத்திற்கு சென்ற விஜய் கீழே விழுந்த வாக்காளர் ஒருவரின் செல்போனை எடுத்துக் கொடுத்தார். "யாருதுபா இந்த போன்" என கேட்டு விஜய் செல்போனை ஒப்படைத்தார்.

தமிழக சட்டசபை தேர்தலின் வாக்குப் பதிவு தொடங்கியது. இந்தத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், கருணாஸ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்கு அளித்துள்ளனர். அரசியல் கட்சியினரும் திரை பிரபலங்களும் காலையிலேயே வாக்களிக்க சென்ற வண்ணம் உள்ளனர்.

tamil nadu assembly election 2026 vijay tvk 2026

அந்த வகையில் நீலாங்கரையில் நடிகர் விஜய் வாக்களிக்க வந்தபோது, அவர் பின்னால் ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள் அதிக அளவில் திரண்டதால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நிழற்குடை (சாமியானா பந்தல்) எதிர்பாராத விதமாக சரிந்தது.

இந்த பரபரப்புக்கு பிறகு விஜய், வாக்குச் சாவடிக்குள் சென்றார். அப்போது பக்கவாட்டில் ஒரு செல்போன் இருப்பதை விஜய் பார்த்தார். உடனே போய் அதை கீழே குனிந்து எடுத்து, "இது யாருடைய போன் பா.. " என கேட்டதும் அங்கிருந்தவர், "அண்ணே என்னோடதுதான்" என சொன்னதும் அவரிடம் போனை விஜய் ஒப்படைத்தார். கடந்த சில தினங்களாக விஜய் பொதுமக்களுடன் பழகி வருகிறார். அண்மையில் பிரச்சாரத்தின் போது மணமக்களை பிரச்சார வாகனத்தில் ஏற்றி அவர்களை வாழ்த்தினார்.

இதையடுத்து அவர் வாக்களிக்க சென்றார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி விஜய் முதல் முறையாக ஒரு அரசியல்வாதியாக இன்று வாக்களித்தார். எப்போதும் போல் விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டதும் ஒரு கூட்டம் அவரை பின்தொடர்ந்து வந்தது.

அப்போது செய்தியாளர்களும் வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கிருந்த சாமியானா பந்தல் சரிந்தது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 233 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த முறை வாக்காளர் திருத்த பட்டியலுக்கு பின்னர் வாக்குப் பதிவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது போல் பேருந்துகள் போதிய அளவு இல்லாத நிலையில் மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. தென் தமிழகத்திற்கு வாக்களிக்க செல்வதற்காக எந்த பேருந்துகளும் இல்லை என கூறி கிளாம்பாக்கத்தில் மறியல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் வாக்குப் பதிவை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என விஜய், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நேரத்தை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும். சொந்த ஊர் செல்வதற்கு பேருந்துகள் கிடைக்காமல் சாமானிய பொதுமக்கள் பேருந்து நிலையங்களில் தவித்து வருவதால், அவர்கள் வாக்களிக்க ஏதுவாக இரவு 8 மணி வரை வாக்குப்பதிவை நீட்டிக்க தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம் எழுதி இருக்கிறார்.

பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆங்காங்கே உள்ள ஹோட்டல்களிலும் கூட்டம் அதிகம் இருந்தது. தீபாவளி, பொங்கலை காட்டிலும் ஓட்டு போட பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+