“Worth-ஏ இல்ல..".. மகளிர் தின விழாவில் சங்கீதாவை துச்சமாக பேசிய விஜய்! விவாகரத்து பற்றி வாய் திறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவாகரத்து வழக்கு விவகாரம் தொடர்பாக முதன் முதலாக பொதுவெளியில் வாய் திறந்துள்ளார் தவெக தலைவர் விஜய். "வருத்தமெல்லாம் கிடையாது. ஹர்ட் ஆக வேண்டாம். நீங்கள் என்னோட சொந்த பிரச்சனையை நினைத்து கவலைப்படாதீர்கள்.. வொர்த்தே இல்ல.. அதை நான் பார்த்துக்கிறேன்" எனப் பேசியுள்ளார் விஜய்.

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

Vijay Breaks Silence on Divorce Case Don t Worry About My Personal Problems

சங்கீதா தொடுத்த விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அந்த உறவால் தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் சங்கீதாவை தவெகவின் தொண்டர்கள் இணையங்களில் ஆபாசமாக விமர்சித்து வந்தனர். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார் சங்கீதா. அந்த மனுவில், 'விஜய் தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளார்' என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஏற்கனவே விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், விஜய்யை திருமணம் செய்து 26 வருடங்கள் குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகளை பெற்று வளர்த்துள்ளேன். விஜய்யுடன் நீலாங்கரை வீடு மட்டுமல்லாமல் அவருடன் பல்வேறு இல்லங்களில் வசித்திருக்கிறேன். இப்போது விஜய் வசித்து வரும் நீலாங்கரை வீட்டில் எனக்கும் சரிபாதி உரிமை உள்ளது. விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தான் நானும் வசித்து வந்தேன். ஆனால் இப்போது அந்த இல்லத்திற்குள் செல்வதற்கு விஜய் அனுமதி மறுக்கிறார்.

பிரிட்டன் குடியுரிமையுடன் நான் லண்டனில் வசிப்பதால் தமிழ்நாட்டில், சென்னையில் தங்குவதற்கு வீடு இல்லை. இதை விஜய் அறிந்திருந்தும் தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார். விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டுக்குள் நான் வசிக்க அனுமதிக்குமாறு விஜய்க்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கின் மூலம் விஜய்யிடம் நியாயமான ஜீவனாம்சம் கோரியுள்ளேன். பலமுறை முயற்சி செய்தும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல விஜய் ஒத்துக்கொள்ள மறுக்கிறார். திரைப்படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கும் குழந்தைகளுக்கும் வேண்டியதை நியாயமாக வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக மகளிர் தின விழாவில் பேசிய விஜய், முதல் முறையாக விவாகரத்து விவகாரம் தொடர்பாக மவுனம் கலைத்துள்ளார். விஜய் இன்று பேசுகையில், "சமீபத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். நீங்கள் போராடி ஹர்ட் ஆக வேண்டாம். நீங்கள் ஹர்ட் ஆவது எனக்கு ஹர்ட் ஆகிறது, அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இதெல்லாம் வொர்த்தே இல்ல.. நீங்க மக்களுக்காக போராடுங்க. நானும் நீங்களும் சேர்ந்து மக்களின் பிரச்சனைகளை பார்ப்போம், அதில் வருத்தம் எல்லாம் கிடையாது" எனப் பேசியுள்ளார்.

தவெக தொண்டர்கள், சமூக வலைதளங்களில் சங்கீதாவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சங்கீதா விவகாரம் தொடர்பாக, "வொர்த்தே இல்லை" என விஜய் பேசியிருப்பது, அதுவும் மகளிர் தின விழாவில் தனது மனைவியைப் பற்றியே துச்சமாக நினைத்துப் பேசியது எதிர்வினைகளை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+