"உடனே வாங்க.." தவெக எம்எல்ஏக்களுக்கு பறந்த அழைப்பு.. விஜய் ஆளுநரை சந்திக்கும்போதே அவசர ஆலோசனை!
சென்னை: தமிழக அரசியலில் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நகர்வுகள் சூடுபிடித்துள்ளன. இதற்கிடையே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் சென்னை பனையூர் அலுவலகத்திற்கு வருமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அவசர அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இப்போது ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து, 108 இடங்களைப் பெற்றுள்ள தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான அழைப்பு வரவில்லை. இதனால் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தவெக தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.

அவசர ஆலோசனை
இந்தச் சூழலில் தான் இன்று காலை 11 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் சென்னை பனையூர் அலுவலகத்திற்கு வருமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அவசர அழைப்பு விடுத்திருந்தார். .
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது . இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகச் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பங்கேற்கத் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
பாதுகாப்பு
நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் பாதுகாப்பு அகற்றப்பட்ட நிலையில் பனையூர் அலுவலகத்தில் பாதுகாப்பு அகற்றப்படவில்லை.. உதவி ஆணையர்,காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என சுமார் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
நம்பர் கேம்
நேற்றைய தினம் ஆட்சி அமைக்கத் தேவைப்படும் எண்ணிக்கை 118 என்ற நிலையில் 113 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை விஜய் கவர்னரிடம் வழங்கினார். மீதமுள்ள எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கிய பின்பு தான் ஆட்சி அமைக்க அழைப்பு கொடுக்க முடியும் என கவர்னர் தரப்பில் விஜய்யிடம் கூறப்பட்டது . இதனைத் தொடர்ந்து மற்ற கட்சிகளிடம் ஆதரவு வேண்டி விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இதற்கிடையில் நேற்று இரவில் இருந்ததே விஜய்க்கு அழைக்கப்பட்ட உயர்மட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.
தனியாக வந்தார்
விஜய் வாகனத்துடன் சென்று கொண்டிருந்த கான்வாய் வாகனமும் நேற்று இரவிலிருந்து திரும்பப் பெறப்பட்டது . நேற்று இரவே பட்டினம் பக்கத்திலிருந்து விஜய் தனியாக அவர் காரில் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றார். அதேபோல் நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததையும் ரத்து செய்யப்பட்டது. இன்று காலை விஜய் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த மெட்டல் டீடெக்டர் வாயில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது
இந்தச் சூழலில் தான் இன்று மீண்டும் விஜய் ஆளுநரை சந்தித்தார். ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். விஜய் ஆளுநர் மாளிகை சென்று உள்ள நிலையில் மறுபுறம் பனையூரில் பொதுச் செயலாளர் தலைமையில் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications