கருப்பு - சிவப்பு சைக்கிளில் வந்து ஆதரவு தந்தாரே.. விஜய் மீது நன்றியுணர்வு இல்லையா? திமுகவை சீண்டிய ஆதவ் அர்ஜூனா
சென்னை: ‛‛திமுகவுக்கு 10 ஆண்டு வேலை செய்ததற்காக தமிழக மக்கள் முன்பு நான் பாவ மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்தபோது ரொம்ப நல்ல கட்சி, நல்லவர்களாக தெரிந்தார்கள். ஏன் நம் தலைவரே தேர்தல் நாளில் கருப்பு - சிவப்பு சைக்கிளில் வந்து ஆதரவு கொடுப்பதாக சொன்னாரே உங்களுக்கெல்லாம் (திமுகவினர்) நன்றியுணர்வு இல்லையே. அரசியலில் ஒருவரை அழிப்பதற்கு இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகளையா சொல்வீர்கள்? பொதுச்செயலாளர் ஓடிவிட்டார். நிர்மல் குமார் ஓடிவிட்டார். யாரு ஓடியது? உங்க அப்பாவை கைது செய்தபோது நீங்கள் ஓடினீர்களே அப்படியா ஓடினோம்.. கலைஞர் கைது செய்யப்படும்போது சொந்த மகன் ஓடினார். வரலாறு பற்றி பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள்'' என தவெக சிறப்பு பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேசி பரபரப்பை கிளப்பினார்.
மாமல்லபுரத்தில் இன்று தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரசார நிர்வாக பிரிவின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசினார். அப்போது அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:

‛‛நாங்கள் என்ன செய்துவிட்டோம். மக்கள் இயக்கமாக இருந்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி மக்களிடம் போய் பிரசாரம் செய்கிறார். மே மாதம் முழுவதுமாக தன்னுடைய பணியில் இருந்து விலகினார். இந்தியாவிலேயே நம்பர் ஒன் அதிகமான சம்பளத்தை விட்டுவிட்டு வந்தார். இந்த மக்களை பார்த்து கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வுக்காக வந்தார்.
இந்த மக்களை சின்ன வயதில் இருந்தே பார்த்து கொண்டிருக்கிறோம். நாம் நன்றாக இருக்கிறோம். பெரிய வீட்டில் இருக்கிறோம். நல்ல காரில் செல்கிறோம். நல்ல படிப்பை பெற்றோம். ஆனால் தமிழ்நாடு முழுவதும் நடிக்க சென்று ஒவ்வொரு ஊராக பார்க்கும்போது இன்னும் குடிசை வீடுகளாகவே இருக்கிறதே? என்று நினைத்தார்.
கலைஞர் குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியதாக பெருமையாக பேசுவார்கள். ஆனால் இன்றைக்கு குடிசைகளை தூக்கி எறிந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய பெரிய மாளிகை கட்டுவதற்காக.. தன் பயணத்தில் கட்சியை ஆரம்பிக்க வேண்டும். மக்களிடம் செல்ல வேண்டும். மக்களிடம் போய் நான் அரசியலில் என்னென்ன செய்வேன்? பிரசாரத்தில் என்னென்ன தவறு நடந்து கொண்டிருக்கிறது? நிர்வாகத்தில் என்னென்ன தவறுகள் நடக்கிறது? தமிழக வெற்றி கழகம் தோழர்களும், நாங்களும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நிர்வாக மாற்றங்களை கொண்டு வருவோம் என்று மக்களிடம் சென்று கொண்டிருக்கிறார்.
நீங்கள் எல்லாம் போய் வீடு வீடாக சென்று மக்களிடம் சப்போர்ட் கேட்கிறீர்கள். ஆனால் நான் மக்களின் வீட்டுக்கு சென்றுவிட்டு தான் ஆதரவு கேட்கிறேன் என மதுரை மாநாட்டில் கூறினார். இது உண்மை. நான் கண்ணால் பார்த்தேன். நான் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திமுகவுக்கு 10 ஆண்டு வேலை செய்ததற்காக இதை கேட்டு கொள்கிறேன்.
தமிழக மக்கள் முன்பு நான் பாவ மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்தபோது ரொம்ப நல்ல கட்சி, நல்லவர்களாக தெரிந்தார்கள். ஏன் நம் தலைவரே தேர்தல் நாளில் கருப்பு - சிவப்பு சைக்கிளில் வந்து ஆதரவு கொடுப்பதாக சொன்னாரே உங்களுக்கு எல்லாம் நன்றியுணர்வு இல்லை. என்ன நன்றியுணர்வு இருக்கு ? அரசியலில் ஒருவரை அழிப்பதற்கு இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகளையா சொல்வீர்கள்?.
பொதுச்செயலாளர் ஓடிவிட்டார். நிர்மல் குமார் ஓடிவிட்டார். யாரு ஓடியது? உங்க அப்பாவை கைது செய்தபோது நீங்கள் ஓடினீர்களே அப்படியா ஓடினோம்.. கலைஞர் கைது செய்யப்படும்போது சொந்த மகன் ஓடினார். வரலாறு பற்றி பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள்'' என கடுமையாக தாக்கி பேசினார்.












Click it and Unblock the Notifications