Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடியேன்னு கூப்பிட மனைவி வரலை.. புள்ளைக்கு பேரு ராசாத்தி.. புஸ்ஸி ஆனந்த் சொல்வது அந்த கதையா இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைவருக்கு யாரெல்லாம் உண்மையாக உழைக்கிறார்களோ அவர்கள் அதற்கான பலனை அடைவார்கள் என்று தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். விஜய் 2026ஆம் ஆண்டு முதல்வர் ஆன பிறகு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அனைவரும் பச்சை பேனாவில் கையெழுத்து போடுவார்கள் என்றும் கூறி நிர்வாகிகளை புல்லரிக்க வைத்துள்ளார்.

சினிமாவில் பிரபலமாக இருக்கும் விஜய் அதே சூட்டோடு அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி ஆரம்பித்த கையோடு சினிமா சூட்டிங்கிற்கு போய் விட்டார் விஜய். இதனையடுத்து கட்சி நிர்வாகிகளை தினந்தோறும் சந்தித்து கூட்டம் நடத்தி வருகிறார் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

Vijay Chief Minister Government Jobs for party executives says Bussy Anand

சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பேசிய புஸ்ஸி ஆனந்த், கட்சியில் புதிதாக சேர்ந்தால் பதவி கிடைக்காமல் போய்விடுமோ என்று யாரும் பயப்பட வேண்டாம். நமக்கு முன்பாக யாரும் வந்து விடுவார்களோ என்று பயப்படாதீர்கள். தளபதி நெஞ்சில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் நிச்சயம் பதவி கிடைக்கும்.

கடகடன்னு 2026 வந்து விடும். நீங்கள் நினைத்த போல தலைவர் விஜய் முதல்வராக நாற்காலியில் அமர்வார்கள். அரசு பதவி நிறைய இருக்கிறது. ஒன்றியம் தொடங்கி மாநகராட்சி வரைக்கும் பல பதவிகள் இருக்கிறது. தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலரும் போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.


தமிழக வெற்றி கழக புறநகர் மாவட்ட தலைவர் ஈசிஆர் சரவணனுக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படும் அவரும் பச்சை பேனாவில் கையெழுத்து போடுவார். என்று புஸ்ஸி ஆனந்த் சொன்ன உடன் நிர்வாகிகள் கை தட்டி விசில் அடித்தனர். உடனே சரவணன் ஓடிச்சென்று புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இனிமேல்தான் நிறைய பிரச்சினை வரும் அதை எல்லாம் சமாளிக்க வேண்டும். விஜய் மக்கள் இயக்கம் இருந்தது போல தமிழக வெற்றி கழகமும் இருக்கும். உங்களுடன் உங்கள் தலைவர் நம்முடைய தலைவர் விஜய் துணை நிற்பார் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பதவி என்பது ஒரு அடையாளத்திற்காகத்தான். உண்மையிலேயே நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தலைவருடைய தோழர்கள்தான். எங்களுக்கு என்று தனியாக ஒரு பட்டமோ.. பதவியோ எங்களுக்கு என்று எதுவும் கிடையாது என்றும் போகிற போக்கில் சொல்லி விட்டு போனார் புஸ்ஸி ஆனந்த்.

கட்சி தொடங்கிய உடனே 2026 தேர்தலில் விஜய் முதல்வர் என்று சொன்னதோடு மட்டுமல்லாது கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் பதவி என்று புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதைத்தான் கிராமத்தில் சொலவடையாக சொல்வார்கள். அடியேன்னு கூப்பிட மனைவி வரலை.. அதுக்குள்ள புள்ளைக்கு பேரு ராசாத்தின்னு வச்சானாம். அந்த கதையாக இருக்கிறது புஸ்ஸி ஆனந்த் பேசுவது. கட்சி ஆரம்பித்து ஒரு வாரம்தான் ஆகிறது. இனிதான் செயல்பட வேண்டும். அதற்குள் முதல்வர் முதல் அரசு பதவிகள் வரை பேச ஆரம்பித்து விட்டார் புஸ்ஸி ஆனந்த்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+