திமுக சதி வேலையாம்.. மிகப்பெரிய அளவில் களமிறக்கப்பட்ட "இன்ஃப்ளூயன்சர்கள்".. அடித்து ஆடும் தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளும் திமுக அரசுதான் கரூரில் நடந்த கொடூரத்திற்கு காரணம் என்று புதிய வதந்தி பகிரப்பட்டு வருகிறது. தவெக நிர்வாகிகள் பலரும் இதை தீவிரமாக பரப்பி வருகிறார்கள். இதற்காக இன்ஃப்ளூயன்சர்கள் பலர் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 12 மணி நேரமாக இதற்காக அதிக அளவில் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் இன்ஃப்ளூயன்சர்கள், சினிமா ரிவ்யூ செய்யும் குழுவினர், அதற்கான பக்கங்கள் களமிறக்கப்பட்டு உள்ளன. இதை வைத்து புதிய நரேட்டிவ் உருவாக்க தொடங்கி உள்ளனர். அதாவது ஆளும் திமுக அரசுதான் கரூரில் நடந்த கொடூரத்திற்கு காரணம் என்று புதிய வதந்தி பகிரப்பட்டு வருகிறது.

TVK Vijay

களமிறக்கப்பட்ட இன்ஃப்ளூயன்சர்கள்

இப்படி களமிறக்கப்பட்ட இன்ஃப்ளூயன்சர்கள் பின்வரும் புகார்களை தீவிரமாக இணையத்தில் வைத்து வருகின்றனர். அவை என்ன?

1. கரூர் நெருக்கடிக்கு, மரணத்திற்கு காரணம் திமுகவின் சதி. உள்ளூர் கரூர் நிர்வாகிகள்தான் இதற்கு பின்னால் உள்ளது.

2. போலீஸ் தடியடி நடத்தியது. அதனால் கூட்டம் கலைந்து செல்லும் போது நெருக்கடி ஏற்பட்டு மக்கள் பலியானார்கள்.

3. அங்கே மின்சார தடை திட்டமிட்டு செய்யப்பட்டது. இதுவே மக்கள் சிக்கி மரணம் அடைய காரணமாக அமைந்தது.

4. விஜய் வளர்ச்சி பிடிக்காமல் திட்டமிட்டு இப்படி சதி வேலை செய்துள்ளனர்.

5. கூட்டத்திற்கு உள்ளே செந்தில் பாலாஜி பெயரை சொன்ன போதுதான் கலவரம் போன்ற சூழல் ஏற்பட்டது, என்றெல்லாம் கருத்துக்கள் பரப்பப்படுகிறது.

ஆளும் தரப்பு விளக்கம்

இதில் ஆளும் தரப்பு பல விளக்கங்களை கொடுத்துள்ளது.

1. தமிழக டிஜிபி வெங்கட்ராமன் கொடுத்த விளக்கத்தில், தமிழக வெற்றி கழகத்தின் கூட்டங்களை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர்கள் கூறியதை விட கூட்டம் அதிகமாக வந்ததை மனதில் வைத்துக் கொண்டுதான் தற்போது கரூரில் பெரிய இடம் அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது.

இதே இடத்தில் மாநில அளவில் ஒரு பெரிய கட்சி பரப்புரை செய்துள்ளது. பத்தாயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் 27 ஆயிரம் பேர் கூடி உள்ளனர். விஜய் பிரச்சாரம் நடத்திய இடத்தில் 500 காவல் துறையினர் பாதுகாப்பில் இருந்தனர்.

முக்கியமாக குறிப்பிட விஷயம் என்னவென்றால் மதியம் மூன்று மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி கோரப்பட்டது. ஆனால் காலை 11 மணியிலிருந்து சேர்ந்த கூட்டம் விஜய் இரவு 7:40க்கு தான் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அதுவரை அங்கு சேர்ந்த கூட்டத்திற்கு போதுமான தண்ணீர் உணவு வழங்கப்படவில்லை. இதுதான் உண்மை., என்று கூறினார்.

2. சட்டம் ஒழுங்கு பொறுப்பு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார். அதில், தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் செப்டம்பர் 23ஆம் தேதி லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரினர். அது மிகவும் ஆபத்தான இடம்.

ஏனென்றால் ஒரு பக்கம் பெரிய பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவதி ஆறு, பாலம் உள்ளது. அங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து நிகழ்ச்சி நடத்த முடியாது என்று தவெகவினரிடமே விளக்கினோம். இதன்பின் அவர்கள் கேட்ட உழவர் சந்தை பகுதியில் அனுமதி கோரினர். ஆனால் அது மிகவும் குறுகலான இடம்.

அதனால் தான், அண்மையில் மற்றொரு கட்சி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை கூட்டி கூட்டம் நடத்திய வேலுச்சாமிபுரத்தை பரிந்துரைத்தோம். அதனை ஏற்றுக் கொண்டு தவெகவினரும் மனு கொடுத்து அந்த இடத்தில் பரப்புரைக்கு அனுமதி பெற்றனர். அதேபோல் காவல்துறை எண்ணிக்கை குறைவாக இருந்ததா என்று கேள்விகள் எழுந்துள்ளது. அதாவது போலீஸ் பாதுகாப்பு அளிக்கையில் 3 வகையாக பிரிப்போம்.

4. அதேபோல் மின்சார தடை தொடர்பாக வெளியாகும் செய்திகள் பொய்யானது என்றும் மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

ஆனாலும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் களமிறக்கப்படும் இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் செய்யப்படும் பொய்யான பிரச்சாரங்கள் மூலம் தவெக அடித்து ஆட தொடங்கி உள்ளது. இது திமுகவிற்கு பின்னடைவாக, எதிராக மாறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+