நான் சத்தமில்லாமல் விவாகரத்து பெற முயன்றும்! விஜய் பிரிந்து செல்ல மறுக்கிறார்! சங்கீதா குற்றச்சாட்டு
சென்னை: விஜய்யின் அரசியல் சூழல் கருதி பலமுறை சுமூகமாக விவாகரத்து பெற முயற்சித்தும் விஜய் அதற்கு ஒப்புக் கொள்ள மறுக்கிறார் என சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் கூறியிருப்பதாவது: விவாகரத்து முடியும் வரை என்னை நீலாங்கரை வீட்டில் தங்கியிருக்க விஜய் அனுமதிக்க வேண்டும். அவர் தங்கியிருக்கும் வீட்டில் எனக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது.

விவாகரத்து முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும். வழக்கறிஞர் மூலம் விஜய் தரப்பினர் மிரட்டுகின்றனர். அந்த வீடுதான் எங்கள் மணவாழ்க்கையின் முக்கிய இல்லமாக இருக்கிறது.
வழக்கு முடிவடையும் வரை அங்கு தங்க அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு மாற்றாக சமமான வசதி கொண்ட மற்றொரு வீடு வழங்கப்பட வேண்டும். விஜய்யின் அரசியல் சூழலை கருதி பலமுறை சுமூகமாக விவாகரத்து பெற முயற்சித்தேன். ஆனால் விஜய் பிரிந்து செல்ல மறுக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருவதால் சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை. விவாகரத்து கோரியுள்ளதால் தற்போது சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். என்னை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார். அந்த வீட்டில் எனக்கும் சரி பங்கு இருக்கிறது என சங்கீதா தெரிவித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: நீலாங்கரை வீட்டில் நான் வசிக்க விஜய் அனுமதிக்க மறுக்கிறார். பிரிட்டன் குடியுரிமை கொண்ட எனக்கு சென்னையில் எங்கள் குடும்ப அந்தஸ்துக்கு ஏற்ப வீடு இல்லை. எனவே விவாகரத்து முடியும் வரை நீலாங்கரை வீட்டிலேயே நான் தங்க அனுமதிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அவர் அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு வீட்டில் என்னை தங்க வைக்க வேண்டும். விவாகரத்து முடியும் வரை எனக்கு விவாகரத்துக்கு பிறகு நான் வேறு ஒரு வீட்டிற்கு சென்றுவிடுகிறேன். கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் இந்த செயலுக்கு ரசிகர்கள், தொண்டர்கள், சக நடிகர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இயக்குநர் அமீர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக்கொண்டு இருக்கிறார். மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா எனும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
அது போல் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பதாவது: இந்த விவகாரம் தனிப்பட்ட விவகாரம் என்றாலும் நாளை மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் சங்கீதா போன்றோருக்கு கூட நியாயம் கிடைக்க வேண்டும். அவர் சிரமத்தில் இருப்பதாகவும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் சங்கீதா தனது மனுவில் தெரிவித்திருந்தார் என தமிழிசை கருத்து கூறியுள்ளார்.
-
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications