2 போட்டோவில்..விஜய் கேரியரையே காலி பண்ண முடியும்! சங்கீதாவை சகிக்க முடியாமல் அர்ச்சிக்கும் ரசிகர்கள்
சென்னை: 27 ஆண்டுகால விஜய் சங்கீதாவின் திருமண பந்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதால் விஜயிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கேட்டிருக்கிறார் சங்கீதா. இந்த நிலையில் திமுக தூண்டுதலின் பெயரிலேயே சங்கீதா செயல்படுவதாக அவரது தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து விஜய் ஆதரவு நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர். ஒரு நடிகரின் மனைவியாக இருப்பதைவிட முதல்வரின் மனைவியாக இருப்பதையே பெண்கள் விரும்புவார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக நடந்து கொள்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.
நடிகரும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அவரது மனைவி சங்கீதா திருமண வாழ்வை முடித்து வைக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த அபிடவிட் முழுமையாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் விவாகரத்து
அவர் தாக்கல் செய்த வழக்கு செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் தாக்கல் செய்யப்பட்டதாகவும், பின்னர் அது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சுமார் 27 ஆண்டுகளாக நீடித்த மணவாழ்க்கைக்கு பின் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பிரமாண பத்திரம் வெளியானது எப்படி? இத்தனை நாட்களுக்குப் பிறகு இந்த விவகாரம் வெளியே வர என்ன காரணம்? என பல கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.
சங்கீதா வழக்கு
இந்த நிலையில் சங்கீதாவை மிகக் கடுமையாக விமர்சித்து ஒரு கும்பல் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது. குறிப்பாக திமுக தரப்புடன் நெருக்கமாக இருக்கும் சங்கீதா அவர்களது தூண்டுதலின் பேரிலேயே தற்போது விவகாரத்து விவகாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளதாக விமர்சித்து வருகின்றனர். மேலும் சங்கீதா குறித்து அருவருக்கத்தக்க வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகளையும் பார்க்க முடிந்தது.
சமூக வலைதள சர்ச்சை
இந்த நிலையில் அடிப்படை புரிதல் இன்றி விஜய் ரசிகர்கள் சிலர் வெறித்தனமாக நடந்து கொள்வதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. 27 ஆண்டுகால திருமண பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. சமூக அரசியல் சூழல், குழந்தைகளின் நலன், உறவினர்களின் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை கடந்து தான் சங்கீதா இந்த முடிவுக்கு வந்திருப்பார். சொல்லப் போனால் ஒரு நடிகரின் மனைவி என்பதைவிட தமிழ்நாடு முதலமைச்சரின் மனைவி என்பதில்தான் சங்கீதாவுக்கு பெருமை வந்திருக்கும் அப்படிப்பட்ட ஒருவரின் அரசியல் வாழ்வை முடித்து கட்ட வேண்டும் என்ற எண்ணம் சங்கீதாவுக்கு துளியும் இருக்காது.
தனிப்பட்ட தாக்குதல்
தனது பிள்ளைகள் மற்றும் தனது தனிப்பட்ட நலனின் அக்கறை கொண்டதால் தான் சங்கீதா நீதிமன்றத்தையே நாடி இருக்கிறார். இல்லையேல் ஒரு பிரஸ்மீட்டை வைத்து சில புகைப்படங்களை வெளியிட்டு விஜயின் கேரியரை மொத்தமாய் முடித்துவிட்டு இருக்க முடியும். மேலும் சங்கீதா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என்பதையும் சங்கீதா குறிப்பிட்டு இருக்கிறதை சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், 27 ஆண்டுகால திருமண பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கும் சங்கீதாவை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அநாகரீகம் என கூறுகின்றனர்.
-
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications