Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொண்டை அடைத்து அழுத விஜய்? ரூ.250 கோடி சம்பளம் வாங்கியவர் இன்று தனித்து விடப்பட்டு? ஒரு அக்கறை குரல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஜனநாயகன் என்பதுதான் என்னுடைய கடைசி படம், அடுத்து வரப்போகிற தேர்தல் எனக்கு பலத்தை தரும், என்னை நம்பி வரும் மக்களுக்காக கடைசிவரை இருப்பேன், அரசியலில் இருந்தும் பின்வாங்க மாட்டேன்" என்று சொன்ன விஜய், தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காமல் இருந்தால், அதுவே அவருக்கு மிகப்பெரிய பலனை பெற்றுத்தரும்" என்று தன்னுடைய விருப்பத்தையும், கருத்தையும் அக்கறையுடன் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "வாழ்க தலைவா, வளர்க தளபதி என்று கண்ணெதிரே பேசிக் கொண்டிருந்த கூட்டத்தினர் எல்லாம், இந்த கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யை விட்டு தெறித்து ஓடிவிட்டார்கள்..

Vijay rs 250 crore video call 250

தெறித்து ஓடிய கும்பல்

ஒருத்தர் சந்தனக்காடு வீரப்பன் காட்டுக்குள் இருக்காரு, இன்னொருத்தர் உத்தரகாண்டில் இருக்காரு, இன்னொருத்தர் பொள்ளாச்சி பக்கம் இருப்பதாக சொல்கிறார்கள்.. என் ரத்தத்தையே எடுத்துக்கோங்க என்று சொன்னவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள்..

இப்போது யாருமில்லாமல் விஜய் தனித்து விடப்பட்டால், அவரது மனநிலை எப்படி இருக்கும்? அதிலும் 250 கோடி சம்பளம் வாங்கக்கூடிய ஹீரோவின் மனநிலை எப்படி இருக்கும்?

வீடியோ காலில் அழுத விஜய்

41 உயிர்கள் என்பது சாதாரண விஷயமில்லை.. 10 நாள் கடந்தாலும், அந்த மனசு உறுத்தல் விஜய்க்கு இருக்கவே செய்யும்.. நேற்று பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோகாலில் பேசியிருக்கிறார் விஜய்..

இதைகூட பலரும் அவர் வீடியோ காலில் பேசவில்லை என்றார்கள்.. ஆனால் அதையும் நாம் விசாரித்தாகிவிட்டது.. உண்மையிலேயே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ காலில் விஜய் பேசியிருக்கிறார்.. அவர்களிடம் அழுதிருக்கிறார் விஜய்.

"தயவுசெய்து நான் பேசுவதை ரிக்கார்டு செய்யாதீங்க, யாரிடமும் இதை ரிக்கார்டு செய்தும் தராதீர்கள்" என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டாராம்.

விரைவில் சந்திக்கிறேன்

அதுமட்டுமல்ல, "உங்களுக்கு ஒரு அண்ணனாகவும், ஒரு தம்பியாகவும், ஒரு மகனாகவும் நான் உங்களுக்காக கடைசி வரை இருப்பேன்.. தற்போதைய சம்பவத்தை மனதில் வைத்து இதை சொல்லவில்லை.. வாய் வார்த்தைக்காகவும் சொல்லவில்லை.. உண்மையாகவே சொல்கிறேன்.. கடுமையான வருத்தத்திலும், அழுத்தத்திலும் இருக்கிறேன்.. விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன்" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

மீதியுள்ள 21 குடும்பத்தினரிடமும் இன்று அல்லது நாளைக்கு விஜய் பேசுவார் என தெரிகிறது.. மேலும் அவர்களுக்கு தரக்கூடிய பணம் என்பது விஜய்யை பொறுத்தவரை சொற்பம்தான்.. எவ்வளவு தந்தாலும் போன உயிர் திரும்பி வரப்போவதில்லை..

என்னிடம் ஒரு நண்பர் பேசும்போது, "கரூர் சம்பவம் தலைவிரித்தாடி கொண்டிருக்கிறது. இங்கே 80களின் நடிகர், நடிகைகளின் ரீயூனியன் தேவைதானா? அதில் 3 நடிகர்களை கவனிச்சீங்களா?" என்று கேட்டார்.

3 நடிகர்கள்

சிரஞ்சீவி, பாக்யராஜ், சரத்குமார் ஆகியோர்தான் அந்த 3 நடிகர்கள்.. இந்த 3 ஹீரோக்களுமே கட்சியை ஆரம்பித்தவர்கள்தான்.. எப்படியாவது வந்து நல்லாட்சியை தந்துவிட மாட்டாரா? என்று இவர்களை அன்றைய காலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் நம்பியிருப்பார்கள்.. ஆனால், இவர்களின் கட்சி இன்று என்ன ஆனது?

திருப்பதியில் கூடிய பிரம்மாண்ட கூட்டத்தை காங்கிரசிடம் அடகுவைத்துவிட்டார் சிரஞ்சீவி.. எம்ஜிஆரின் கலை வாரிசு பாக்யராஜ் என்றதுமே அவர்தான் அடுத்த முதல்வர் என்றார்கள்.. சமத்துவ மக்கள் கட்சியின் மாநாடு மதுரையில் நடந்தபோது, கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.. தன்னுடைய சமுதாயத்துக்கு சரத்குமார் ஏதாவது செய்வார் என்று நம்பினார்கள்.

மிகப்பெரிய பலம்

ஆனால், அந்த கட்சிகள் எல்லாம் இன்று என்ன ஆனது? இவர்களைபோல விஜய்க்கும் அந்த நிலைமை வந்துவிடக்கூடாது.. எனவே தன்னுடைய கொள்கையில் விஜய் உறுதியாக இருக்க வேண்டும்.

'ஜனநாயகன் என்பதுதான் என்னுடைய கடைசி படம், அடுத்து வரப்போகிற தேர்தல் எனக்கு பலத்தை தரும், என்னை நம்பி வரும் மக்களுக்காக கடைசிவரை இருப்பேன், அரசியலில் இருந்தும் பின்வாங்க மாட்டேன்" என்று விஜய் சொல்லியிருந்த நிலையில், இந்த வார்த்தைகளிலிருந்து அவர் பின்வாங்காமல் இருந்தால், அதுவே அவருக்கு மிகப்பெரிய பலனை பெற்றுத்தரும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+