"விஜய் ஆச்சரியக்குறியோ தற்குறியோ எப்படி இருந்தாலும் கவலை இல்லை.. எங்க குறியே வேற” - அமைச்சர் ரகுபதி
சென்னை: "விஜய் ஆச்சரியக் குறியோ தற்குறியோ எப்படி இருந்தாலும் கவலை இல்லை. எங்கள் குறி தேர்தல் குறிதான். யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை; யாரோடும் எங்களுக்கு பகை இல்லை" என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், தவெகவினர் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துப் பேசினார். விஜய் பேசுகையில், "யாரைப் பார்த்து தற்குறி என்கிறீர்கள்? இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தான் உங்கள் அரசியலை கேள்விக்குறி ஆக்கப்போகின்றனர். அவர்கள் தற்குறி அல்ல, ஆச்சர்யக்குறிகள்.

மாற்றத்துக்கான அறிகுறி. தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, வாழ்நாள் முழுவதும் விடையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்கள் அரசியலேயே கேள்விக்குறியாக்க போகிறார்கள், இந்த போட்டி எப்படி இருக்க போகுது என்றால், மக்களுக்காக மக்களோடு மக்களாக இருக்கும் நம்மளை மக்களே தேர்வு செய்ய போகிறார்கள். ஆல்ரெடி தேர்வு செய்தாச்சு." எனப் பேசினார் விஜய்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரகுபதியிடம், செய்தியாளர்கள் தவெக தலைவர் விஜய் நேற்று காஞ்சிபுரத்தில் பேசியது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரகுபதி, "விஜய் ஆச்சரியக் குறியோ தற்குறியோ எப்படி இருந்தாலும் கவலை இல்லை. எங்கள் குறி தேர்தல் குறிதான். யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை.
எங்களுக்கு யாரோடும் போட்டி இல்லை. களத்தில் இருக்கும் அனைவரையும் சமமாகவே பார்க்கிறோம். அவர்கள் உங்களுக்கு அரசியல் எதிரிகள் தானே தவிர தனிப்பட்ட எதிரிகள் இல்லை. யாரோடும் எங்களுக்கு பகை இல்லை. ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான ஆட்சியைத் தருவது திராவிட மாடல் அரசு தான். எந்த ஏமாற்று வேலையும் தமிழ்நாட்டில் பலிக்காது. தவெக என்பது பாஜகவின் 'சி' டீம்." என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மேலும், "தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்று சொன்னால் திராவிட மாடல் ஆட்சி வந்தால் தான் முடியும். என்பதை இந்த நான்கு ஆண்டுகளில் நிரூபித்துள்ளோம். சொன்னதை செய்துள்ளோம், செய்வதை தான் சொல்லியுள்ளோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது கிடையாது.
தமிழர்களின் வரலாற்றையும், திராவிடத்தின் வரலாற்றையும் தற்போதுள்ள இளைய தலைமுறை அறிந்து கொள்வதற்காக நாங்கள் அறிவுத் திருவிழாவை நடத்தினோம். இது பற்றி எல்லாம் சிலருக்கு புரிதல் கிடையாது. அவர்களது ஒரே எண்ணம் ஆட்சியை கைப்பற்றுவது. ஆட்சிக்கு வந்து உட்கார வேண்டும் என்பதுதான்.
அதை தவிர தமிழர்களைப் பற்றியோ தமிழர்களின் கொள்கையை பற்றியோ பண்பாட்டைப் பற்றியோ கலாச்சாரத்தை பற்றியோ அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது. விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தன்னைத்தானே மக்களிடத்தில் தரம் தாழ்த்தி வருகிறார். அதற்கு ஏன் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார் ரகுபதி.
-
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும்.. குமரியில் விஜய் பேச்சு -
"விஜய்க்கு உடல்நல பிரச்சனை? ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை" என தகவல்! அதான் பிரச்சாரம் ரத்தாம்! -
மாட்டிகிட்டியே பங்கு! திமுகவின் வாக்குறுதியை காப்பியடித்து தவெகவின் வாக்குறுதியாக அறிவித்த விஜய் -
விசில் ஊதிக்கொண்டு சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்த தவெக தொண்டர்கள் -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
விஜய்க்கு அடிமேல் அடி.. ஸ்டாலின் - எடப்பாடி - சீமானிடம் பின்தங்கிய தவெக.. இந்த 2 மேட்டரை கவனிச்சீங்களா -
Vijay: ஒரு நாள் பிரச்சாரம்! அடுத்த நாள் ரெஸ்ட்! தவெகவுக்கே ஓட்டு கேட்காத விஜய்! காங்கிரஸ் தப்பியது! -
விஜய்க்கு கூடிய கூட்டம்.. வாயை பிளந்த கட்சிகள்.. ரியாலிட்டி என்ன? விசாரித்த ஸ்டாலின்! பின்னணி












Click it and Unblock the Notifications