வதந்தி பரப்பிய.. இன்ஃப்ளூயன்சர்கள், இன்ஸ்டா பிரபலங்கள் கைதாக வாய்ப்பு? ஸ்டாலின் முக்கிய திட்டம்!
சென்னை: கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார். இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வரும் நபர்கள் மீது தமிழக அரசு ஆக்சன் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் விஜய் பரப்புரையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரில் 39 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 பேரின் உடல்கள் அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், கரூர் நெரிசல் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம்; எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் அப்பாவி மக்கள், தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள்
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகு, எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் உடன் ஆலோசனை நடத்தி, இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிக்கான விதி, நெறிமுறைகள் வகுக்கப்படும். இந்த நெறிமுறைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நான் நம்புகிறேன்.
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
ஸ்டாலின் ஆக்சன்
இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வரும் நபர்கள் மீது தமிழக அரசு ஆக்சன் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தினர் விஜய்க்கு ஆதரவாக தீவிரமாக PR அரசியல் செய்து வருகின்றனர். விஜயின் பெயரை கெடுக்க கூடாது.. அதை காப்பாற்ற வேண்டும் என்பதை முன்னிறுத்தி பல போஸ்டுகளை கோலிவுட் விமர்சகர்கள் போட்டு வருகின்றனர்.
விஜய் ரசிகர் மன்ற தலைவர்கள் பலரும் கூட இதேபோல் இது அரசின் சதி என்று பொய்யாக வதந்திகளை பரப்பினார்கள். விஜய் இரங்கல் சொல்லவில்லை, நிர்வாகிகளை மருத்துவமனைக்கு அனுப்பவில்லை, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்கவில்லை என்பதை எல்லாம் கேள்வி கேட்காமல்.. விஜய் பெயரை காக்க தீவிரமாக போஸ்ட் செய்தனர்.
கடந்த 12 மணி நேரமாக இதற்காக அதிக அளவில் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் இன்ஃப்ளூயன்சர்கள், சினிமா ரிவ்யூ செய்யும் குழுவினர், அதற்கான பக்கங்கள் களமிறக்கப்பட்டு உள்ளன. இதை வைத்து புதிய நரேட்டிவ் உருவாக்க தொடங்கி உள்ளனர். அதாவது ஆளும் திமுக அரசுதான் கரூரில் நடந்த கொடூரத்திற்கு காரணம் என்று புதிய வதந்தி பகிரப்பட்டு வருகிறது. இவர்கள் மீது ஆக்சன் எடுக்க, இவர்களை கைது செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதை முன்கூட்டியே இப்போது வதந்தி பரப்ப வேண்டாம் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications