Leo: ராஜேஸ்வரி பிரியாவை கண்டா வர சொல்லுங்க! என்னாது அண்ணாமலையா? விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு
சென்னை: லியோ படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியை தவறாக சொன்ன ராஜேஸ்வரி பிரியா இங்க வந்து பேசட்டும் என தியேட்டரில் இருந்து கொண்டு ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் விஜய் ரசிகர்கள் கூறியதாவது: விஜய் ரசிகர்களுக்கு இன்று திருவிழாதான். நாங்கள் ராஜேஸ்வரி பிரியாவுக்கு என்ன சொல்லிக் கொள்கிறோம் என்றால் கடலூரில் விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் சார்பில் ஜேசிபியை கொண்டு அழிக்கிறார்கள்.

அது போன்ற விஷயங்களுக்கு அவர் போராடினால் பயனுள்ளதாக இருக்கும். அது போல் குழந்தைகளையும் பெண்களையும் பலாத்காரம் செய்கிறார்கள். அவர்களை கண்டித்தும் ராஜேஸ்வரி பிரியா போராட்டம் நடத்தலாம். அதைவிட்டுவிட்டு விஜய் சினிமாவில் புகைப்பிடிக்கிறார் என்பதற்காக அவர் போராட்டம் நடத்துவதாக சொல்வது ஒன்றும் பிரயோஜனம் இல்லாத விஷயம்.
இது ஒரு படம் அவர் அந்த காட்சியில் நடித்துதான் ஆக வேண்டும். அவர் என்ன நடுத்தெருவில் சிகரெட் பிடித்தாரா, வீட்டிற்குள் பிடித்தாரா, பொது இடங்களில் பிடித்தாரா? இல்லை தானே. பிறகு எதற்கு விஜய்யை தவறாக பேச வேண்டும். ராஜேஸ்வரி பிரியா எதுவாக இருந்தாலும் இங்கு வந்து பேசட்டும். இதை நான் பகிரங்க எச்சரிக்கையாகவே சொல்கிறேன். மேலும் அவர் கெட்டவார்த்தை பேசுகிறார் என்கிறார்கள்.
இதெல்லாம் கதைக்காகத்தானே அவர் பேசுகிறார். விஜய்யை பேசினால் விளம்பரம் கிடைக்கும் என ராஜேஸ்வரி பிரியா நம்புகிறாரோ என்னவோ? ஒரு படத்தின் காட்சியை டிரெய்லரை வைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது. அந்த சீனை லோகேஷ் கனகராஜ் எதற்காக வைத்தார் என்பதை சினிமா பார்த்தால்தான் தெரியும்.
ஒரு வேளை போதை பழக்கம் தவறான பழக்கம் என்பதை இளைஞர்களுக்கு சுட்டிக் காட்டக் கூட இருக்கலாம்தானே! எதையுமே டிரெய்லரை பார்த்துவிட்டு சொல்லக் கூடாது. இது ஒரு படம், அதில் விஜய் ஒரு கேரக்டர். எதுக்கு தேவையில்லாம பிரச்சினை செய்கிறார்கள். ஜெயிலர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரஜினி சார் சுருட்டு பிடித்தாரு, அப்போதெல்லாம் ராஜேஸ்வரி பிரியா மேடம் எங்க போனாங்க?
அண்ணன் விஜய் தனியாக அரசியலுக்கு வருவேன் என கூறியிருக்கிறார். அதனால் அவர் மீது பாஜக, திமுக, அதிமுக என எல்லாருக்கும் பயம் இருக்கு. அதனால்தான் பூசணிக்காய் வைத்து திருஷ்டி சுற்றியுள்ளோம். அண்ணாமலையாவது பாதயாத்திரை என ஊர் ஊரா போனாரு. ஆனால் எங்கள் தளபதி ஒரே இடத்தில் நீண்டநேரமாக நின்று கொண்டே பரிசு பொருட்களை கொடுத்தார் (10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் நடத்திய பாராட்டு விழா). விஜய் நடிக்கும் சீன்கள் அவருடைய ரசிகர்களுக்கு பிடித்தால் போதும். எந்த கட்சியினரும் கருத்து சொல்ல தேவையில்லை. இவ்வாறு ரசிகர்கள் தெரிவித்தார்கள்.












Click it and Unblock the Notifications