ஓவரா போறாரே.. விஜய்யின் அரசியலுக்கே பிரச்சனை? புஸ்ஸி ஆனந்தின் அத்துமீறல் - ரசிகர்கள் ஆதங்கம்
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் அறிகுறிகள் தெளிவாக தெரிவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து இருக்கும் நிலையில், அவரது அரசியல் நடவடிக்கைகளை கவனித்து வரும் புஸ்ஸி ஆனந்த் செயல்பாடுகள் பலரை அதிருப்தியடைய வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகளை களமிறக்கினார் விஜய். லியோவை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் 68 ஆவது படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவுக்கு கேப் விட்டு அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் பணிகளில் விஜய் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ரசிகர்களை விஜய் கேட்டுக்கொண்டபோது அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்ற பேச்சு எழுந்தது. அதன் தொடர்ச்சியாக காயிதே மில்லத், பாவேந்தர் பாரதிதாசன், தீரன் சின்னமலை, சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளன்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.
ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து வழங்கி நலத்திட்ட உதவி வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர், விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விஜய் நேரில் பரிசுகளை வழங்கி கவுரவித்தது அவரது அரசியல் வருகையை உறுதிபடுத்தியது. 12 மணி நேரத்துக்கும் மேலாக மேடையில் நின்ற விஜய் மாணவர்கள், பெற்றோர்களிடம் நடந்துகொண்ட விதம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
அதே சமயம் மாவட்டம், வட்டார அடிப்படையில் பரிசுகளை வழங்காமல் தொகுதி அளவில் மாணவர்களை தேர்ந்தெடுத்து விஜய் பரிசுகளை வழங்குவது அரசியல் நகர்வாகவே பார்க்கப்பட்டது. அந்த நிகழ்வில் அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள் என விஜய் மாணவர்களிடம் அறிவுறுத்தி, ஓட்டுக்கு பணம் வாங்குவது பற்றியும் பேசினார். இந்த நிலையில் விஜய் பிறந்தநாளான இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஜூன் மாதம் சென்னை திருவான்மியூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விலையில்லா விருந்தகத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார். இதற்காக அவர் காரிலிருந்து இறங்கி வந்தபோது அவரது காலில் விழுந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆசி பெற்றது விமர்சனத்துக்கு உள்ளானது.
அப்போதே அவர் ரசிகர்களிடம் கடுமையாக நடந்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் என்று சொன்ன ரசிகையிடம், பெயரை சொல்லக்கூடாது தளபதி என்றே சொல்ல வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் பேசியது சர்ச்சைக்குள்ளானது.
அதேபோல் நேற்று விருந்து நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை புஸ்ஸி ஆனந்த் கோபமாக அடித்து விரட்டிய வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற அரசியல் கட்சிகளை போலன்றி விஜய் மாற்றத்தை கொண்டு வருவார் என்று மக்களும் ரசிகர்களும் எதிர்பார்க்கும் நிலையில் புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகள் விஜய்யின் அரசியல் நகர்வில் கருப்பு புள்ளியாக மாறும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications