சென்னையில் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது இன்ப அதிர்ச்சி தந்த விஜய்.. நெகிழ்ந்த ரசிகர்கள்
சென்னை: சென்னை திருவான்மியூரில் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீட திரும்பிய போது நடிகர் விஜய் செய்த சூப்பர் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. முதற்கட்டமாக கடந்த ஜூன் 28ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் இன்று (ஜூலை 3) விழா நடந்த. இந்த விழாவிலும் நடிகர் விஜய் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இன்றைய நிகழ்ச்சியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், புதுச்சேரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், திருவாரூர், திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகளிலிருந்து முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 740 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் பங்கேற்றார்கள்.
சென்னை திருவான்மியூர் தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டதை அறிந்த தொண்டர்கள், விஜய்யை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்றார்கள். ஆனால் பள்ளி மாணவ மாணவிகளுக்குகான விருது வழங்கும் விழா என்பதால் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் சில ரசிகர்கள் எப்படியாவது விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தனியார் மண்டபத்தின் சுவரில் ஏறி குதிக்க முயற்சித்தனர். அவர்களை பவுன்சர்கள் விரட்டிஅடித்தனர்.
இந்நிலையில் இரவு வரை நடந்த நிகழ்ச்சி நடந்த முடிந்த நிலையில், அனைவருக்கும் பரிசுகள் வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய், கடைசியில் வீடு திரும்பினார்.முன்னதாக வீடு திரும்பிய போது, நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். விஜய் தன்னை காண காத்திருந்த ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வீட்டின் அருகில் வேன் மீது ஏறி நின்றார். அதில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து கீழே இறங்கி அங்கிருந்து வீட்டிற்குள் சென்றார்.
-
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம்












Click it and Unblock the Notifications