Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எரியும் நெருப்பில் பெட்ரோல்! மலேசியாவில் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்திக்கு விஜய் கொடுத்த பரிசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூட்டணி பேசி வந்ததாக தகவல்கள் வெளியாகும் நிலையில் அவருக்கு மலேசியாவில் "ஜனநாயகன்" ஆடியோ லாஞ்சின் போது, விஜய் பரிசு கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல் இந்த மலேசிய பரிசு விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த கட்சியையே தரக்குறைவாக பேசுவது, சொந்த கட்சிக்கே வேட்டு வைப்பது போன்ற செயல்களில் முன்னாள் எம்பி ஒருவர் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில் தற்போது பிரவீன் சக்கரவர்த்தியும் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Praveen Chakravarthy Vijay

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தொகுதிகள் எண்ணிக்கை, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

ராகுலுக்கு நெருக்கமானவர்

அதே வேளையில் காங்கிரஸ் நிர்வாகியும் ராகுலுக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி செல்லும் என்ற தகவலால் திமுக கடும் கோபத்தில் இருந்தது.

திமுக தலைமை கோபம்

எனினும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் திமுக தலைமையை நேரில் சந்தித்து அவரை சமாதானம் செய்திருந்தனர். எனினும் பிரவீன் மீது டெல்லி காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றதால் திமுக தலைமை அப்செட்டில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி கூறுகையில், நானும் விஜய்யும் இட்லி தோசை சாப்பிட கூட சந்தித்திருக்கலாம். இதையெல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தை என சொல்வதா என கிண்டலாக கேட்டிருந்தார்.

பிரவீன் சக்கரவர்த்தி- விஜய்

பிரவீன் சக்கரவர்த்தி- விஜய் சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது, அதுகுறித்து தனக்கு தெரியாது என கூறிவிட்டார். இந்த நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி சந்தித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அடுத்த பிரச்சினை

இந்த பிரச்சினையே இன்னும் ஓயாத நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி தற்போது மற்றொரு பிரச்சினையை இழுத்து விட்டிருக்கிறார். அதாவது தமிழகத்தின் கடன் சுமை குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

தமிழகத்தின் கடன் சுமை

அவர் தன் பதிவில் கூறியிருப்பதாவது: உத்தரப்பிரதேச மாநிலத்தைவிட தமிழகத்தின் கடன் நிலைமை மோசமாகியுள்ளது என காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கூறியிருந்தார். இதற்கான வரைப்படத்தையும் போட்டு அவர் விளக்கியிருந்தார்.

வெந்த புண்ணில் வேல்

இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல் இருந்தது. இந்த ட்வீட்டை வைத்தே பாஜக , திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் திமுக- காங்கிரஸ் கட்சி இடையே பிளவு என கொளுத்தி போடுகிறது. இந்த நிலையில் பிரவீனுக்கு திமுக முன்னாள் எம்பி எம்.எம். அப்துல்லா, எம்பி ஜோதிமணி, எம்பி சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் மூத்த நிர்வாகி கோபண்ணா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

பிரவீன் சந்திப்பு

ஏற்கெனவே விஜய்யுடன் பிரவீன் சந்தித்ததால் தங்கள் மீது திமுக தலைமை கோபத்தில் இருந்து வரும் நிலையில் செல்வப்பெருந்தகை, "பிரவீன் மீது நடவடிக்கை எடுக்க டெல்லிக்கு புகார் அனுப்பியிருப்பதாக" தெரிவித்துள்ளார். மேலும் பிரவீனை ஆர்எஸ்எஸ், பாஜக சதிக்கு இரையாகும் தற்குறி என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா

இது போதாகுறைக்கு மலேசியாவிலும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது கடந்த 27ஆம் தேதி விஜய் நடித்த "ஜனநாயகன்" படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள விஜய் மலேசியா சென்றிருந்தார்.

ரூ 7000 டிக்கெட்

இந்த விழாவில் கலந்து கொள்ள டிக்கெட்டுகள் இந்திய மதிப்பில் ரூ 7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டதாம். பொதுவாக இது போன்ற சினிமா நிகழ்வுகளில் முதல் வரிசையில் படத்தின் நாயகன், நாயகி, இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், ஸ்பான்ஸர்கள் அவர்களது குடும்பத்தினர் அமர்வார்கள்.

எம்ஐபி

2ஆவது வரிசையில் Most Important Person களுக்கானது. அதன் பிறகுதான் விஐபி 1, விஐபி2 என பாஸ் வழங்கப்படும். விஜய் , மலேசியாவில் Shangri-la என்ற ஹோட்டலில்தான் தங்கியிருந்தார். கபாலி படம் மலேசியாவில் எடுத்த போது இதே ஹோட்டலில் 22 ஆவது மாடியில் ரஜினி தங்கியிருந்தாராம்.

விஜய் கால் வைத்ததும் போன்

இந்த நிலையில் விஜய் மலேசியாவில் கால் வைத்ததுமே அவருக்கு பிரவீன் சக்கரவர்த்தி போன் செய்தாராம். அப்போது தனது நண்பர்கள் 4 பேருக்கு இசை வெளியீட்டுக்கான பாஸ் வேண்டும் என்றாராம். அதற்கென்ன கொடுத்துவிட்டால் போச்சு என கூறிய விஜய், உடனே தனது உதவியாளர்களிடம் சொல்லி அவர்களுக்கான 4 பாஸ்களை ஏற்பாடு செய்து அவர்கள் தங்கிருக்கும் ஹோட்டலுக்கே பாஸை கொண்டு போய் கொடுத்தனராம்.

நெகிழ்ச்சி

இதனால் அந்த 4 பேரும் விஜய்யின் செயலையும் பிரவீன் மீது விஜய்யிடம் இருக்கும் செல்வாக்கையும் எண்ணி பூரித்து போய்விட்டார்களாம். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் கட்சியில் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் விஜய்யுடனான தொடர்பை பிரவீன் துண்டித்த பாடில்லை. இது எங்க போய் முடிய போகிறதோ!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+