ஆறுதல் சொல்லாமல்.. அசால்டாக சென்னைக்கு போன விஜய்.. கரூர் வரும் முதல்வர் ஸ்டாலின்!
கரூர்: தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய், கரூரில் அசம்பாவிதம் நடந்த இடத்திலிருந்து துயரத்துடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அதேநேரம் சென்னையில் இருந்து கரூருக்கு கிளம்பி வந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..இன்று அதிகாலையே மருத்துவமனைக்கு வந்து காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். கரூரில் மாவட்ட ஆட்சித்த தலைவர், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா சுப்பிரமணியன் ஆகியோர் சிகிச்கைகான முன்னெடுப்புகளை செய்து வருகிறார்கள்.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 38 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.. சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் வந்துள்ளனர். மேலும், திருச்சி, சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மருத்துவக் குழுக்களுடன் கரூருக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்றிரவே கரூர் சென்று துயர சம்பவத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளதாக முதல்வர் கூறியிருந்தார். இதன்படி சென்னையில் விமானத்தில் திருச்சிக்கு புறப்படும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து கரூர் சென்று அதிகாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார்.
ஆனால் இவ்வளவு துயரம் நடந்தபோது, அங்கிருந்த விஜய், ரசிகர்களை சந்தித்து ஆறுதல் கூறாமல் ஏன் சென்னை புறப்பட்டு சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அவரை பார்க்கவே குழந்தைகள், பெண்கள், இளம் சிறார்கள் என பலரும் வந்திருந்தார்கள். காலாண்டு தேர்வு முடிந்த நிலையில், பல பள்ளி மாணவர்கள் வந்திருந்தார்கள். ஒரே நேரத்தில் விஜய்யை பார்க்க ஆர்வமாய் முன்னாடி சென்றதால் இந்த நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுவதால், கண்டிப்பாக விஜய், சென்னைக்கு சென்றிருக்கவே கூடாது என்றும், கரூரில் நேரில் சென்று ஆறுதல் கூறி, சிகிச்சையை ஒருங்கிணைத்திருக்க வேண்டும்.
அதேநேரம் அசம்பாவிதத்திற்கு தவெக மட்டுமல்ல.. நிச்சயம் அரசும், காவல்துறையும் பொறுப்பு என்பதால், இத்தகைய பாதுகாப்பு குறைபாடு பற்றி காவல்துறையும், தமிழக அரசு கண்டிப்பாக விளக்கம் அளிக்க போகின்றன.. அதேபோல் தனது தரப்பு விளக்கத்தை கண்டிப்பாக விஜய் அளிக்க வேண்டியது அவசியம் ஆகும். தவறோ சரியா, தைரியாக என்ன நடந்தது.. இனி என்ன செய்ய போகிறது தவெக என்பதை விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் விஜய்க்கு பெரிய அரசியல் கரையாக இந்த நிகழ்வு மாறிவிடும்.












Click it and Unblock the Notifications