Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொதித்த சங்கீதா.. சரியும் 'பெண்கள்' ஓட்டு வங்கி? கவலையில் தகிக்கும் விஜய்.. அப்படியே முடங்கிட்டாராமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்கத் துடிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய்க்கு, இப்போது அரசியல், சினிமா சண்டைகளை விட வீட்டுச் சண்டையே பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. குறிப்பாக, சங்கீதா தரப்பிலிருந்து கிளம்பியுள்ள விவாகரத்து வழக்கு விஜய்யின் அரசியல் கணக்குகளை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.

Vijay is upset that he might lose vote banks of women due to Sangeetha row

பெண்களின் 'நம்பிக்கை' நாயகன்... இப்போது?

விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியபோது, அவருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது அவரது 'ஃபேமிலி மேன்' பிம்பம், பெண்களுக்கு பேவரைட் பிம்பம்தான். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே தமிழக அரசியலில் ஒரு கட்சியின் வெற்றி என்பது பெண்களின் கைகளில்தான் இருக்கிறது. விஜய்யும் இதைப் புரிந்து வைத்திருந்தார். தமிழகத்தின் தாய்மார்கள் மற்றும் இளம்பெண்களின் வாக்குகளைத் தனது பிரதான 'ஓட்டு வங்கி'யாக அவர் நம்பியிருந்தார்.

ஆனால், தற்போது சங்கீதாவுடன் ஏற்பட்டுள்ள கசப்பான விவாகரத்து விவகாரம், அந்த நம்பிக்கையில் ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

"ஒரு குடும்பத்தை ஒழுங்காக வழிநடத்தத் தவறியவர், சொந்த மனைவியையே கொடுமை படுத்தியவர்.. எப்படி பெண்களை பாதுகாப்பார்.. எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்.. நாட்டை எப்படி வழிநடத்துவார்?"

என்கிற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கத் தொடங்கிவிட்டன. இதுதான் இப்போது விஜய்யை நிலைகுலைய வைத்துள்ளது.

மூத்த பெண்களின் கோபம்: எகிறும் பயம்!

குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள 'பெரியம்மாக்கள்' மற்றும் 'பாட்டி'களின் ஓட்டுகளை விஜய் பெரிதும் எதிர்பார்த்தார். சினிமாவில் நல்ல மகனாகவும், நல்ல கணவனாகவும் வலம் வந்த பிம்பம், இந்த விவாகரத்து வழக்கால் சிதைந்துவிடுமோ என்கிற அச்சம் கட்சிக் கூடாரத்தில் நிலவுகிறது.

சங்கீதா மிகவும் கோபமாக இருக்கிறார் என்பதும், அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் விஜய்க்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார் என்பதும் விஜய்யை அப்செட் ஆக்கியுள்ளது. சங்கீதா ஒருவேளை பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தனது தரப்பு நியாயங்களை எமோஷனலாகப் பேசினால், அது பெண்களின் மத்தியில் பெரும் அனுதாப அலையை உருவாக்கும். அது நேரடியாக விஜய்யின் அரசியல் இமேஜை டேமேஜ் செய்துவிடும்.

சங்கீதா மனுவில் சொல்லி இருப்பது என்ன?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக சங்கீத தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள திருமணம் கடந்த உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.

திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.

நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.

நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக கூறிய விஜய் திருந்தவே இல்லை. 2021ல் தொடங்கி என்னை தனியாக வாழுமாறு நிர்பந்தித்தார்.

விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த' நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
ஆனால், அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.

என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன், என்று சங்கீதா மனுவில் கூறி உள்ளார்.

டேமேஜ் கண்ட்ரோல் செய்யப்படுமா?

"சங்கீதாவை சமாதானப்படுத்த முடியுமா?" அல்லது "இந்த விவகாரம் அரசியலில் எதிரொலிக்காமல் பார்த்துக் கொள்ள முடியுமா?" என விஜய்யின் நெருங்கிய வட்டாரங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. விவாகரத்து என்பது தனிப்பட்ட விஷயம் என்றாலும், ஒரு பொதுவாழ்வில் இருப்பவருக்கு அது 'பப்ளிக் செண்டிமெண்ட்' சார்ந்தது என்பதை விஜய் உணர்ந்திருக்கிறார்.

பெண்கள் ஓட்டுகள் சரிந்தால், டிவிடியின் வெற்றி வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகிவிடும் என்கிற கவலை விஜய்யின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. சங்கீதா கிளப்பப்போகும் அந்தப் புயல், விஜய்யின் அரசியல் படகைச் சாய்க்குமா அல்லது அவர் அதைச் சமாளித்துக் கரை சேருவாரா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+