"திரும்பி போற பழக்கமே இல்ல!" டைலாக் விட்டுட்டு வாட் ப்ரோ? ஜனநாயகன் வழக்கு வாபஸ்! நெட்டிசன்கள் நக்கல்
சென்னை: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் விவகாரத்தில் தணிக்கை வாரியத்திற்கு எதிராகத் தாக்கல் செய்த ரிட் மனுவை வாபஸ் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதற்கிடையே ஜனநாயகன் வழக்கை வாபஸ் பெறுவதற்கான காரணத்தைத் தயாரிப்பு நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
விஜய் நடித்திருந்த ஜனநாயகன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. அரசியலில் குதித்துள்ள விஜய், இதற்கு மேல் நடிக்க மாட்டேன் எனக் கூறிவிட்டார். இதனால் ஜனநாயகனை விஜய்யின் கடைசிப் படம் என்று விளம்பரப்படுத்தினர். இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இருப்பினும், படத்திற்கான சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் குழப்பம் ஏற்பட்டது.

வாபஸ்
இது தொடர்பாகத் தயாரிப்பாளர் தரப்பு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு தொடரப்பட்ட போதிலும், இதில் தயாரிப்பாளருக்குச் சாதகமாக எந்தவொரு முடிவும் வரவில்லை. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருப்பதால் படம் வெளியாவதில் சிக்கல் தொடர்ந்தது.
பிரச்சினை இருக்காது
இதற்கிடையே வழக்கைத் தொடர தங்கள் தரப்புக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்து KVN புரொடக்ஷன்ஸ் வழக்கறிஞர் கடிதத்தைச் சமர்ப்பித்து இருந்தார். மேலும், அந்தக் கடிதத்தில் எதற்காக வழக்கைத் திரும்பப் பெறுகிறார்கள் என்பது குறித்த விவரங்களும் இடம்பெற்று இருந்தது. அதில், மறு ஆய்வுக் குழுவை அணுகத் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதால், இனி வழக்குத் தொடர விரும்பவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாபஸ் பெறுவது தொடர்பான வழக்கு நாளை முதல் வழக்காக உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. நீதிபதி பிடி ஆஷா இந்த வழக்கை விசாரிக்கிறார்..
முன்னதாக படம் மறு தணிக்கைக்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், தயாரிப்பாளர் தரப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மறு தணிக்கையில் படத்திற்கான சான்றிதழ் கிடைத்தால் பிரச்சனையில்லாமல் படம் வெளியாகும்.
நெட்டிசன்கள் நக்கல்
வழக்கு வாபஸ் தொடர்பான தகவல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் இது குறித்துப் பல கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "உன்ன காலி பண்ணிருவேன், அசிங்கப்படுத்திருவேன்னு சொல்ற எவனா இருந்தாலும் சரி... திரும்பிப் போற ஐடியாவே இல்ல... I AM COMING... என்ற படத்தில் டைலாக் வைத்துவிட்டு.. இப்படிச் சட்டப் போராட்டத்தில் இருந்து பேக் அடிப்பது எந்த விதத்தில் சரி ப்ரோ என நக்கலடித்து வருகிறார்கள்.
பின்னணி
'ஜனநாயகன்' படத்தை முதலில் டிசம்பர் 19ம் தேதி CBFCஇன் ஐந்து பேர் கொண்ட குழு பார்த்துள்ளது. சில காட்சிகளை நீக்கினால் 'U/A 16+' சான்றிதழ் வழங்கலாம் என வாரியம் தகவல் அனுப்பியதாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியது. இந்தப் பரிந்துரையை ஏற்று, தயாரிப்பு நிறுவனமும் திருத்தங்களைச் செய்தது. திருத்தப்பட்ட திரைப்படம் டிசம்பர் 24ம் தேதி மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு நடுவே குழுவில் இருந்த உறுப்பினர் ஒருவர், மும்பையில் உள்ள CBFC தலைவர் பிரசூன் ஜோஷிக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பினார். படத்தில் ராணுவம் தொடர்பான பல குறிப்புகள் உள்ள நிலையில், பாதுகாப்பு நிபுணர் யாரும் குழுவில் இல்லை என்பதால் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். அதுவே படத்திற்குச் சிக்கலாக மாறியது. தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்ததால் நிலைமை மேலும் சிக்கலானது. இந்தச் சூழலில் தான் வழக்கைத் தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
-
விஜய், கௌதம புத்தர்.. குடும்பத்தை விட்டுட்டு வந்துட்டாரு! மெர்சல் நினைப்பு! வெளுத்த ப்ளூ சட்டை மாறன் -
தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் – விஜய்க்கு வானதி சீனிவாசன் அட்வைஸ் -
Kiruthiga: பிரபலம் யார்னு கேட்ட கிருத்திகா! இதெல்லாம் லிஸ்ட்லேயே இல்லைனு சொன்ன கஸ்தூரி! "வினோதம்" -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
நான் சத்தமில்லாமல் விவாகரத்து பெற முயன்றும்! விஜய் பிரிந்து செல்ல மறுக்கிறார்! சங்கீதா குற்றச்சாட்டு -
அடையாறு சாஸ்திரி நகரில் தவெக கூட்டம்.. திடீரென வந்த காரை எட்டிப்பார்த்து.. இன்ப அதிர்ச்சி -
சங்கீதா கோர்ட்டுக்கு போயிருக்க கூடாது! இன்னேரம் விஜய் கைதாகியிருப்பார்! எஸ்.வி.சேகர் கருத்து -
பெரம்பூர் தொகுதி.. விஜய்யை எதிர்க்க தயாராகும் ஆளூர் ஷா நவாஸ்? சென்னையில் களமிறங்கும் விசிக! -
என் புள்ளைய அந்த மர்ம வலையில இருந்து காப்பாத்துங்க: உருகிய எஸ்ஏசி.. விஜய் பற்றி உடைத்த உண்மை இதுதான் -
“அன்பு படர்ந்த கொம்பிலே அகந்தை குரங்கு!” மனைவியை துச்சமாக பேசிய விஜயை கிழித்த ப்ளூ சட்டை மாறன் -
சங்கீதாவுக்கு வீட்டில் உரிமை உள்ளது.. தவெகவினர் ஆபாச அவதூறு டூ மச்.. விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம்












Click it and Unblock the Notifications